Friday, December 16, 2011

காயல்பட்டணம் ஜாவியா தோன்றிய வரலாறு

பண்டைய இலக்கியங்களில் வகுதை, பௌத்திர மாணிக்கப்பட்டினம், காயல், காகிறூர் என்று பெருமையோடு அழைக்கப்பட்ட காயல்பட்டணம் தோன்றி சுமார் 1400 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

காயல்மாநகரில் இஸ்லாம் காலூன்றியது முதல் இங்கு வாழ்ந்த இசுலாமி;யர்கள் அனைவரும் மிகவும் ஒற்றுமையாகவும், மார்க்க கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டும் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் உறுதியுடனும் இருந்து வந்தனர். அத்துடன் அனைவரும் ஷாபிஈ மத்ஹபின் சட்டதிட்டங்களை பேணி நடந்து வந்தனர்.

பண்டைய மன்னர்களுக்கு தளபதிகளாகவும், அமைச்சர்களாகவும், போர்வீரர்களாகவும், ஆலோசகர்களாகவும் ஏன்? நாட்டை ஆளும் மன்னராகவும் இருந்தது மட்டுமின்றி இஸ்லாத்திற்காக உயிர் துறந்த உத்தம ஷுஹதாக்களாகவும் திகழ்ந்தனர்.

ஆயிரக்கணக்கான இறைநேசர்களை தன்னகத்தே கொண்டிருக்கம் ஊர் காயல்பட்டினம் என்றால் அது மிகையாகாது. அதற்குரி;யசரித்திர சான்றுகளும் நமக்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

ஒற்றுமையாக மார்க்க சட்டதிட்டங்கள் படி நடந்து வந்த மக்கள் இறைவனை அடையும் வழியை அறிந்து 'காதிரிய்யா தரீகா' எனும் ஞானப்பாட்டையை பின்பற்றி வந்தனர். இந்த தரீகா குத்புல் அக்தாப் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தரீகாவாகும்.இந்த தரீகாவின் திக்ருகள், அவ்ராதுகள், அமல்களை நடைமுறைப்படுத்தி வந்தனர் காயல்பட்டணம் நகர் வாசிகள்.

மேலும் காதிரிய்யா தரீகாவிற்கு வலுவூட்டவும், புத்துணர்ச்சியூட்டி பரவச் செய்யவும் அவ்வப்போது ஊருக்கு ஆன்மீகப் பேரரசர்கள், தரீகா ஷெய்குமார்கள் வருகை தந்து கொண்டிருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் நாகூரில் அடங்கப்பட்டிருக்கும் மகான் ஷாகுல் ஹமீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். இவர்கள் நமதூருக்கு வருகை தந்து பலருக்கு ஞானதீட்சை வழங்கினார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் காயல்பட்டணம் மரைக்கார் பள்ளியில் மறைந்து வாழும் மகான் சுலைமான் வலி யுல்லா அவர்களின் தந்தை சதக்கத்தி நெய்னார் ஆவார்கள். காயல்வாசிகளின் அன்பான வரவேற்பையும், உபசரிப்பையும் பார்த்து அகமகிழ்ந்த நாகூர் நாயகம் அவர்கள் இவ்வூரில் அவ்லியாக்களும், குத்புமார்களும் தோன்றிக்கொண்டே இருப்பார்கள் என்று துஆவும் செய்து சென்றனர். இவர்களுக்குப் பின் ஹஜ்ரத் கௌதுல் அஃலம் அவர்களின் உத்திரவிற்கு இணங்க காயல்பட்டணம் பெரிய குத்பா பள்ளிக்கு பகுதாதிலிருந்து பவருகை தந்து ஷெய்கு சுலைமான் வலி நாயகம் போன்ற மூன்று நபர்களுக்கு காதிரிய்யா தரீகாவில் பைஅத்தும், கிலாபத்தும் கொடுத்து சென்றவர்கள் மௌலானா ஜலாலுத்தீன் பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு என்பவர்கள்.

காதிரிய்யா தரீகாவின் அமல்கள், திக்ருகள் ஊர் பள்ளிவாயில்களிலும், தைக்காக்களிலும், வீடுகளிலும் தொடர்ந்து நடந்து வந்தன.

நகரில் தரீகாவிற்கு என்று தனியாக ஹல்கா அமைத்து திக்ரு செய்த பெருமை சுலைமான் வலி அவர்களின் மகனார் ஷெய்கு சதக்கத்துல்லா அப்பா அவர்களின் மகள் வழிப் பேரர் குத்புஸ் ஸமான் உமர் வலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹும் ஆவார்கள். இவர்கள் அக்காலத்தில் மக்களால் சாகிபு அப்பா என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களுக்குப் பின் அவர்களின் மகனார் தைக்கா சாகிபு வலி நாயகம் அவர்கள் இந்த தரீகை வழி நடத்திச் சென்றனர்.

ஒற்றுமையின் சிதைவு தோன்றிய விதத்தை இனி வரும் தொடரில் பார்ப்போம்...

No comments:

Post a Comment