Thursday, March 24, 2011

காயல்பட்டணத்தில் உலமாக்கள் விவாத அரங்கு

காயல்பட்டணத்தில் உலமாக்கள் விவாத அரங்கு

கடந்த 11-8-1998 ம் வருடம் செவ்வாய்க் கிழமை வாவு காதர் ஹாஜி அவர்கள் வீட்டில் தப்லீகை எதிர்க்கும் மஹ்லறா உலமாக்களும், தப்லீகை ஆதரிக்கும் ஜாவியா உலமாக்களும் மற்றும் ஏனைய இருதரப்பு உலமாக்களும் ஒன்று கூடினார்கள். கூட்டம் மாலை 5 மணிக்கு மௌலவி எஸ்.எஸ் கலந்தர் மஸ்தான் ரஹ்மானி அவர்களின் தலைமையில் நடைபெற்றதாகவும், அதில் பேசப்பட்ட விசயங்கள் பற்றி சில குறிப்புகளை இணையதளத்தில் கையெழுத்துப் பிரதியோடு (அபூ சுமைய்யா-பெயர் குறிப்பிட விரும்பாதவர்)எழுதியுள்ள ஒரு கடிதம் எமது பார்வைக்கு கிடைத்தது. அது பற்றிய விரிவான விளக்கத்தை தங்கள் முன் வைக்கிறோம். அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழிக் காட்ட போதுமானவன்.

கூட்டத்தில் ஆரம்பமாக எம்.எம்.உவைஸ் ஹாஜி அவர்கள், பல சரித்திரங்களை கூறி விட்டு உலமாக்கள் இங்கு கூடியிருப்பது தப்லீக் சம்பந்தமாக பேசத்தான் என்று விளக்கவுரை அளித்தார்கள்.

விவாத அரங்கின் தலைவர் தப்லீகு எதிர்ப்பாளர்களை தப்லீக் பற்றிய குற்றச் சாட்டைக் கூறச் சொன்னார்கள். மௌலவி எஸ்.எம்.ஹைச். ஸைபுத்தீன் ஆலிம் அவர்கள், 'தப்லீக் ஜமாஅத்தில் வஹ்ஹாபிஸம் கலந்திருக்கிறது. அது தப்லீக் ஜமாஅத்தின் நிறுவனர் இல்யாஸும் அவனது குருமார்களும் வஹ்ஹாபிஸத்தையும் அதன் நிறுவனரையும் போற்றிப் புகழ்ந்துள்ளனர். இது அவர்கள் எழுதிய நூல்களில் இருக்கிறது' என்று சொல்லவே,

தலைவர் அவர்கள், தப்லீக் ஆதரவாளர்கள் தரப்பை இதற்கு உங்கள் பதில் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'நூற்களை காட்டட்டும் அதன்பிறகு பதில் சொல்கிறோம்' என்றார்கள்.

தலைவர் அவர்கள் அதற்குரிய ஆதாரங்களை காட்டச் சொல்ல, தப்லீகு எதிர்ப்பாளர்கள், 'தற்போது எங்களை மார்க்கப் பிரச்சனைகளைப் பற்றி பேசத்தான் உலமாக்கள் கூட்டம் நடத்தப்படுகிறது என்று சொல்லி அழைத்தார்கள். தப்லீகைப் பற்றி பேச அழைத்திருப்பின் அதற்குரிய ஆதாரங்களை கொண்டு வந்திருப்போம். தற்போது கொண்டு வரவில்லை. அடுத்த கட்டத்தில் மஃரிபிற்குப் பின் கொண்டு வருகிறோம்' என்று சொன்னார்கள்.

தலைவர் அவர்கள் வெளியூர் செல்வதால் மஃரிபிற்குப் பின் நடைபெறுவதாக இருந்த கூட்டம் அடுத்த நாளுக்கு ஒத்திப் போடப்பட்டது.

அடுத்த நாள் 12-8-1998 அன்று காலை 9 மணிக்கு கூட்டம் ஆரம்பித்தது. தலைவர் அவர்கள் தப்லீகு எதிர்ப்பாளர்களிடம் வாதத்தை ஆரம்பிக்க சொல்ல, மௌலவி சைபுத்தீன் ஆலிம் அவர்கள், தப்லீகு நிறுவனர் மௌலவி இல்யாஸின் குருவான மௌலவி ரஷீத் அஹ்மது கங்கோஹி எழுதிய பத்வா தொகுப்பான 'பதாவா ரஷீதிய்யா' என்ற நூலில் உள்ள வஹ்ஹாபிஸத்தையும், அதன் தலைவர் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியையும் ஆதரித்து, புகழ்ந்து எழுதப்பட்டு வெளியிடப்பட்ட பத்வா வாசகங்களை வாசித்தும், தமிழில் மொழிபெயர்த்தும் காட்டினார்கள்.
இதற்கு என்ன பதில்? என்று தலைவர் அவர்கள் தப்லீகு நல்லெண்ணவாதிகளிடம் கேட்க,

அவர்கள், அந்த கிதாபை வாங்கிப் பார்த்து அந்த வாசகங்களை திரும்பத் திரும்ப படித்துப் பார்த்தார்கள். பின்பு ஒரு அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டார்கள். பின்பு வெளியில் வந்தார்கள். பின்பு அறைக்குள் சென்று கதவை சாத்தி பேசிக் கொண்டார்கள். அதன் பின்பு, இந்த புத்தகங்களின் பிரதியை தேடி ஜாவியா சென்றார்கள். ஆனால் விவாதத்தில் கலந்து கொண்ட அங்குள்ள ஆலிம் ஒருவர் அதை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்.

அதை நோட்டம் விட்ட தப்லீகு ஆதரவாளர்கள், 'தாங்கள் கூறும் வாசகம் எங்கள் புத்தகத்தில் இல்லை. எனவே அதை ஏற்க முடியாது' என்று சொன்னார்கள். உடனே சைபுத்தீன் ஆலிம் அவர்கள் அந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்து அதன் வெளியீட்டகத்தையும், அச்சிட்ட ஆண்டையும் பார்த்தார்கள். இரு தரப்பினர்களின் புத்தகங்களும் வேறுவேறு அச்சகத்தால் வெளியிடப்பட்டவைகளாக இருந்ததினால், பக்கங்கள் வித்தியாசப்பட வாய்ப்புள்ளது என்று சொல்லி, அந்த பத்வா இடம்பெற்றுள்ள தலைப்பையும், பத்வா எண்ணையும் குறித்து அதைப் பார்க்கச் சொன்னார்கள்.

அதன்பிறகு அவர்கள் அந்த புத்தகத்தில் அதை நோட்டமிடவே அவ்வாசகம் எழுத்துப் பிழையின்றி அப்படியே இருக்கக் கண்டார்கள். உடனே தப்லீகு ஆதரவாளர்கள் அனைவர்களும் ஒன்று கூடி தனி அறையில் பேசிவிட்டு வந்தார்கள்.

அறையிலிருந்து வெளிவந்த அவர்கில் அப்துல்லாஹ் மக்கி என்பவர் , 'மௌலானா ரஷீத் அஹ்மது கங்கோஹி முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைப் பற்றி தீர்க்க ஆராயமலும், அவர் ஹன்பலி மத்ஹபை சார்ந்தவர் என்று பரவலாக பேசப்பட்டதாலும், அனாச்சாரங்களை சாடுபவராக இருந்ததாலும் அவரைப் புகழ்ந்து அப்படி பத்வா கொடுத்துவிட்டார்கள்' என்றார்..

அதற்கு தலைவர் அவர்கள், 'பத்வா என்பது தீர்க்க ஆராய்ந்தல்லவா கொடுக்க வேண்டும்? அவர்கள் தீர்க்க ஆராய்ந்து வஹ்ஹாபிஸத்தை நல்லது என்று சொல்லியிருக்கலாம் அல்லவா?' என்று கேட்டார்கள்.

அதற்கு மௌலவி அப்துல்லா மக்கி அவர்கள், 'கேள்வி தனிப்பட்ட நபரைப் பற்றியது. மார்க்கச் சட்டமாயிருப்பின் குர்ஆன், ஹதீது ஆதாரப்படி சொல்லியிருப்பார். தனிப்பட்ட நபரைப் பற்றியதாக இருந்ததால் கேள்விப்பட்டதை வைத்துத்தான் சொல்லியிருக்கிறார்' என்றார். 'இறுதியாக உங்கள் முடிவான கருத்துதான் என்ன?' என்று தலைவர் அவர்கள் கேட்க,
மௌலவி ரஷீத் அஹ்மது கங்கோஹி தான் கேள்விப்பட்டதை வைத்து அப்படி பத்வா கொடுத்துவிட்டார்கள். அவர்களின் மறைவிற்குப் பிறகு, தேவ்பந்த் உலமாக்களுக்கு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைப் பற்றி ஆதாரப்பூர்வமான தகவல் கிடைத்தது. அதன் பிறகு வந்த தேவ்பந்த் உலமாக்கள் அவரையும் அவரது ஆதரவாளர்களையும் காரிஜியாக்களைப் போன்று வழிகேடர்கள் என்று பத்வா கொடுத்திருக்கிறார்கள். எனவே முந்தைய பத்வா மாற்றப்பட்டு விட்டது' என்றார்.

இதில் தப்லீக் ஸ்தாபகர் மௌலவி இல்யாஸின் ஆசிரியரான மௌலவி கலீல் அஹ்மது அம்பேட்டவி எழுதிய 'அல்முஹன்னது அலல் முஃபன்னது' என்ற கிதாபில் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைப் பற்றியும் அவரது கொள்கை வழிகெட்ட காரிஜிய்யாக்களின் கொள்கையைப் போன்றது என்றும் சொல்லியிருப்பதாகவும் அப்துல்லா மக்கி அவர்கள் எடுத்துச் சொன்னார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.


(தப்லீக் ஆதரவாளர்கள் ஆதாரம் காட்டும் கலீல் அஹ்மது அப்பேட்டவி யார்?
கலீல் அஹ்மது அம்பேட்டவி ஏழுதிய 'அல்முஹன்னது' என்ற நூல் என்ற நூல் தேவ்பந்திகளின் அகீதா கிதாபு என்றும் சொல்லியிருக்கிறார். சரி! இதுதான் தேவ்பந்திகளின் அகீதா நூல் என்றால் கலீல் அஹ்மது அம்பேட்டவி எப்படிப்பட்டவர்? அவரின் கொள்கை என்ன? என்று பார்த்தால்,
சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்தவரைத்தான் இதில் உதாரணம் காட்ட வேண்டும். அதை விடுத்து சுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாறுபட்ட கொள்கையுடையவர்களையும் அவரின் சொல்லையும்  உதாரணம் காட்ட வேண்டிய காரணம் என்ன?

கலீல் அஹ்மது அம்பேட்டவி சுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாறுபட்ட கொள்கையுடையவர் என்பது அவர் எழுதிய நூற்களிலிருந்து தெரியவருகிறது. அவர் எழுதியதில் உதராணங்களுக்கு சில:
1. 'அல்லாஹ் பொய் சொல்வது சாத்தியமானதுதான் என்ற மஸ்அலாவை இப்போது யாரும் புதிதாகச் சொல்லவில்லை. முன்னோர்களிலேயே அதிக அபிப்பிராய பேதமுண்டு' –பறாஹீனே காதிஆ பக்கம் 3.
2. இப்படி ஒவ்வவொரு நாளும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த செய்தியை (மவுலிது ஷரீபை) ஓதி வருவதானது, ஹிந்துக்களின் ஸாங்கு, கன்யா பிறப்புக்கு ஒப்பாகிறது. இவர்கள் அவர்களை விடவும் மேலே போய் விட்டார்கள். அவர்களோ ஒரு குறிப்பிட்ட நாளில்தான் செய்கிறார்கள். இவர்களோ எந்தவகையான கட்டுப்பாடுமின்றி விரும்பிய சமயங்களிலெல்லாம் இந்த வீண் கற்பனை வேலையைச் செய்கிறார்கள். – பறாஹீனே காத்திஆ பக்கம் 148.
3. முடிவாக அவசியம் சிந்தித்துப் பார்க்க வேணடும். ஷைத்தான், மலக்குல் மவுத்து இருவரின் நிலைமைகளைப் பார்த்து விட்டு பூமி முழுவதும் அறியக் கூடிய அறிவு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹ1p வஸல்லம் அவர்களுக்கு இருப்பதாகத் தரிபடுத்துவதானது ஷிர்க்கு என்றில்லாமல் ஈமானின் எந்த பாகத்தைச் சார்ந்ததாகும்? ஷைத்தானுக்கும் மலக்குல் மவ்த்துக்கும் இந்த விசால அறிவு இருப்பதாக குர்ஆனின் (நஸ்ஸு) ஆதாரத்தைக் கொண்டு தரிபட்டிருக்கிறது. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு விசால அறிவு உண்டு என்பதாக எண்ணுவதற்கு என்ன(நஸ்ஸு) ஆதாரமிருக்கிறது? இதனால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு விசால அறிவு இருக்கிறது என்று சொல்வதனால்) எல்லா ஆதாரங்களையும் மறுத்து ஒரு ஷிர்க்கை ஸ்தாபிக்க வேண்டி ஏற்படுகிறது.' –பறாஹீனே காத்திஆ. பக்கம் 51.
4. 'தேவுபந்து மத்ரஸாவின் மகிமை ஹக்குதஆலாவின் சமூகத்தில் றாம்பவும் அதிகமாகும். நூற்றுக்கணக்கான ஆலிம்கள் இங்கிருந்து படித்து வெளியேறி இருக்கிறார்கள். அநேக ஜனங்களை வழிகேடு என்னும் இருளை விடடு அகற்றியிருக்கிறார்கள். இக்காரணத்தினால்தான் ஒரு ஸாலிஹான மனிதருக்கு நாயகம் ஸல்'லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தரிசிக்கும் பாக்கியம் கனவில் கிடைத்தது. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருதுவில் பேசுவதைக் கண்டு நாயகமே, தாங்கள் அரபியாயிற்றே. தங்களுக்கு இந்த பாஷை எப்படி தெரியவந்தது? என வினவியதற்கு, எப்பொழுது தேவுபந்து மத்ரஸாவின் உலமாக்களோடு நம்முடைய விவகாரத் தொடர்பு ஆனதோ அப்போதிருந்தே நமக்கு இந்தப் பாஷை தெரியலாயிற்று என்று அவர்கள் சொன்னார்கள். ஸுப்ஹானல்லாஹ்! இதனால் இந்த மத்ரஸாவின் பதவி நன்றாகத் தெரியவருகிறது.' –பறாஹீனே காத்திஆ பக்கம் 26.

தேவ்பந்திகளின் கொள்கை நூல் என்று இவர் எழுதியதாக சொல்லப்படும் அல்முஹன்னது என்ற நூல் பொய்யும் புரட்டையும் கொண்டது என்பது உலமா பெருமக்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதைப் பார்க்க: http://sufimanzil.org/wp-content/uploads/downloads/2010/03/andapulugu.pdf

பாருங்கள் இதுதான் தேவுபந்தியின் கொள்கைகள்.)
பாருங்கள்! அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைப் பற்றி முற்றிலும் ரஷீது அஹ்மது கங்கோஹிக்கு தெரியாதாம்? அவர் கேள்விப்பட்டதைத்தான் சொல்கிறாராம். இது தான் தப்லீக் அபிமானிகளின் வாதமாக இருக்கிறது.
இதை தப்லீகு எதிர்ப்பாளர்கள் ஏற்கவில்லை. அவர் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்கவில்லை. எனவே அவரும் வஹ்ஹாபிகளுடன் உடன்பாடு உள்ளவரே என்று சொன்னார்கள். உடன் கல்ஜ ஃபாஸி ஆலிம் அவர்கள் இப்னு தைமிய்யாவைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார்கள். அதற்கு தலைவர்கள் அவர்கள் அவர் வழிகேடர் என்பதுதான் உலமாக்களின் ஏகோபித்த கருத்து என்று சொன்னதும்,

இப்னு ஹஜர் அஸ்கலானி இமாம் அவர்கள் இப்னுத் தைமிய்யாவை புகழ்ந்தும், அவரை ஷெய்குல் இஸ்லாம் என்று கூறியும் உள்ளார்களே! என்றார். அதற்கு தலைவர் அவர்கள் அவர் பேரறிஞர்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் கொள்கை வழிகேடானது என்றார்கள். அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் இப்னு தைமிய்யாவின் கொள்கையை ஏற்றுக்  கொண்டதாகவோ, அந்த வழிகெட்ட கொள்கையைப்  பின்பற்றச் சொன்னதாகவோ எங்கும் இல்லை என்னும் போது இங்கு அதைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

ரஷீத் அஹ்மத் கங்கோஹி பற்றி சொன்னது உண்மையா?

 ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த ரஷீத் அஹ்மது கங்கோஹி தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகர் மௌலவி இல்யாஸுடைய மூத்த குருமார்களில் ஒருவராக இருக்கும் மௌலவி இஸ்மாயில் திஹ்லவி என்பவரால்; அப்துல் வஹ்ஹாப் நஜ்தி எழுதிய 'கிதாபுத் தௌஹீது' எனும் நூல் மொழி பெயர்த்து 'தக்வியத்துல் ஈமான்' என்ற பெயரில் வட இந்தியாவில் வெளியிடப்பட்டது. அதில் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு மாற்றமான பல்வேறு புதிய கொள்கைகள் கூறப்பட்டிருந்தன.

தக்வியத்துல் ஈமானில் கூறப்பட்டிருப்பது என்ன?

உதாரணத்திற்கு சில:

1. ரபீவுல் அவ்வலில் மவுலிது ஷரீபு மஜ்லிஸ் நடத்துகிறவன், அதில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த செய்தி வரும்போது எழுந்து நிற்கிறவன் முஸ்லிமல்ல(காபிர்)- பக்கம் 56.
2.வானம், பூமயிலுள்ள ஒருவரும் யாருக்கும் ஷபாஅத்து செய்ய மாட்டார்கள்.-பக் 5.
3. எவனாவது நபி, அல்லது வலியை அல்லது இமாமை அல்லது ஷஹீதை அல்லது எந்த ஒரு மலக்கையோ, ஷெய்கையோ அந்தச் சமூகத்தில் இந்த மாதிரி ஷபாஅத்து செய்வார்களென்று நம்புவார்களேயானால் அவன் அசல் முஷ்ரிக்காகவும், மடையனாகவும் இருக்கும். – பக் 24.
4. எவருக்கு முஹம்து என்றோ அலி என்றோ பெயர் இருக்கிறதோ அவர் எந்த வஸ்திலும் அதிகாரம் உடையவர் அல்ல.-பக் 33
5. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயரில்அவர்கள் சொன்னதாக சொல்லும் பொய்யைப் பாருங்கள், 'நானும் ஒரு நாளைக்கு மண்ணோடு மண்ணாகிப் போகிறவனாக இருக்கும்.-பக்49
6.ரஸூல் விரும்பினால் ஆகப் போகிறது ஒன்றுமில்லை.-பக்47.
7. எல்லா சிருஷ்டிகளும் சிறியதோ, பெரியதோ அல்லாஹ்வின் முன்னால் செம்மானை(செருப்பு தைப்பவனை) விடவும் மிக அற்பமானவர்களேயாகும். – பக்.11.
8. அல்லாஹ் பொய் சொல்ல முடியும். அல்லாஹ் பொய்சொல்வது சாத்தியமாகும்.-பக்கம் 31.
9. மறைவான சங்கதிகளை விசாரித்துக் கொள்வது அல்லாஹ்வுடைய இஷ்டத்தைச் சேர்ந்ததாகும். எப்பொழுது விரும்புகிறானோ அப்பொழுது விசாரித்துக் கொள்வான். இது அல்லாஹ் ஸாஹிபுடைய கருமம் ஆகும். – பக் 16.
10. பின்னர் அல்லாஹ் அல்லாதவர்கள் சுயமாகவே அறிவார்கள் என்று நம்பினாலும் சரி, அல்லது அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து அறிவார்கள் என்று நம்பினாலும் சரி எந்த விதத்திலும் ஷிர்;க்கு உண்டாகிவிடும். – பக். 7.
11. அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்ளுங்கள். மற்ற யாரையும் கொண்டு ஈமான் கொள்ளாதீர்கள். – பக் 11.

அச்சமயத்தில் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அதற்கு எதிராக பல்வேறு புத்தகங்கள், பத்வாக்கள் சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களால் வெளியிடப்பட்டது. மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூட தங்கள் 'மஙானி' எனும் நூலில் 'இஸ்மாயில் திஹ்லவி அப்துல் வஹ்ஹாப் நஜ்தியை பின்பற்றிய வழிகெட்ட மடையன்' என்று எழுதியிருக்கிறார்கள்.

ஆனால் ரஷீத் அஹ்மது கங்கோஹி அப்படிப் பட்டவர் அல்ல.  கங்கோஹி அவர்கள் இஸ்மாயில் திஹ்லவியையும் அவர் எழுதிய தக்வியத்துல் ஈமானையும் நன்கு (இது அப்துல் வஹ்ஹாப் நஜ்தியுடைய கிதாபுத் தௌஹீது நூலின் மொழிபெயர்ப்பு என்பதை) அறிந்திருக்கிறார். அவரை மகானாக ஒப்புக் கொண்டிருக்கிறார். அந்த நூலைப் படித்தும் இருக்கிறார். அதன்படி அமல் செய்திருக்கிறார். அதைக் கொள்கையாகவும் கொண்டிருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக அவர் வெளியிட்ட பத்வாவைப் பாருங்கள்:

இந்தக் வழி கெட்ட கொள்கைகள் கொண்ட 'தக்வியத்துல் ஈமானை வைத்திருப்பதும், அதைப் படிப்பதும், அதன்படி அமல் செய்வதும் பார்ப்பது ஐனுல் இஸ்லாமாகும்(இஸ்லாம்தானாகவே இருக்கும்)' என்று ரஷீத் அஹ்மத் கங்கோஹி தனது  'பதாவா ரஷீதிய்யா' நூலில் பக்கம் 41 லும்,

விடை: தக்வியத்துல் ஈமான் எனும் நூல் ரொம்ப விசேசமான உண்மையான நூலாகும். மேலும் ஈமானை சரிபடுத்தக் கூடியதும் ஈமானுக்கு வலுவை கொடுக்கக் கூடியதுமாகும். குர்ஆன் ஹதீஸின் கருத்துக்கள் பூராவும் அதில் இருக்கிறது என்று பக்கம் 41லும்,
பக்கம் 42ல் 'முத்தகீன்களைத் தவிர வேறு யாரும் அல்லாஹ்வுடைய அவுலியாக்களாக இல்லை என்ற ஆயத்தின் பிரகாரம் மௌலவி இஸ்மாயில் திஹ்லவி ஒலியாக இருக்கும் என்றும்,

அதே பக்கத்தில் தக்வியத்துல் ஈமான் எனும் நூல் ரொம்ப நல்ல நூல். ஷிருக்கையும், பிதுஅத்தையும் மறுப்பதில் நிகரில்லாதது. அதன் ஆதாரங்கள் முற்றிலும் கிதாபு ஹதீதைக் கொண்டுள்ளவைகளேயாகும். அதை வைத்து இருப்பதும் அதைப் படிப்பதும் அதன்படி அமல் செய்வதும் இஸ்லாம்தானாகும். மேலும் நற்கூலி கிடைக்க காரணமுமாகும். அதை வைத்து இருப்பது குப்ர் என்று எவன் சொல்வானோ அவன் தானே காபிர் அல்லது பிதுஅதுக்கார பாஸிக்காக இருக்கும் என்றும் பத்வா வெளியிட்டிருக்கிறார்.

இவ்வாறு இருக்க இதைப் போய் முழுமையாக மறைத்து தற்போதுள்ள குற்றச்சாட்டிலிருந்து தற்போது மட்டும் தப்பித்தால் போதும் (பிறகு இது போன்ற விவாதம் இனி நடக்கவாப் போகிறது? என்ற எண்ணத்தில், மக்களுக்கு என்னத் தெரியப் போகிறது?) என்று கற்றறிந்த ஆலிம்களாக இருந்தும் வடிகட்டிய பொய்யை (அதாவது அவர் கேள்விப்பட்டதைத்தான் கொல்லிருக்கிறார்) சொல்லியிருக்கிறார்கள் என்றால் இவர்களின் செயலை எதனுடன் ஒப்பிடுவது?

இதற்காகத்தான் திடட்டமிட்டு தப்லீகு எதிர்ப்பாள ஆலிம்களிடம் விசயத்தை விளக்கி சொல்லாமல் விவாத அரங்கிற்கு அழைத்து வந்தார்களோ?

அதேபோல் குன்யத்துத் தாலிபீன் என்ற நூலில் கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'இமாம் அபூ ஹனீபா அவர்களை வழிகெட்ட 72 கூட்டத்தில் சேர்த்திருப்பதாக சொல்லியிருக்கிறார்கள'; என்று சொன்னதாக சொல்லப்பட்டிருக்கும் வாசகங்கள் பின்னால் வந்த கெடுமதியாளர்களால் இட்டுக்கட்டப்பட்டது என்று அஷ்ஷெய்க் ஷாஹ் வலியுல்லாஹ் போன்றோர் கூறியிருக்கிறார்கள். இதையெல்லாம் இவர்கள் பார்த்திருக்கவில்லை போலும்? நுனிப்புல் மேய்ந்தால் இப்படித்தான் இருக்கும்.

இவ்வாறு இட்டுக்கட்டு, பொய், அவதூறு செய்திகளையெல்லாம் இங்கு கொண்டு வந்து வாதத்தில் வைப்பது ஏன்? அதற்கென்று தனியாக அல்லவா விவாதம் வைக்க வேண்டும்? பிரச்சனைகளைத் திசை திருப்பும் நாடகமல்லவா?

இவ்வாறிருப்பின் - அதாவது அவர் கேள்விப்பட்டதை வைத்துதான் பத்வா வெளியிட்டிருப்பின் அதன் பின் வந்தவர்கள் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியை காரிஜியைப் போன்று வழிகேடர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றால், நீங்கள் ஏன் அந்த பத்வாவை வெளியிடுகிறீர்கள்' என்று தப்லீக் எதிர்ப்பாளர்கள்  கேட்கவே,

அதற்கு தப்லீகு அபிமானிகள் ஈஸால் தவாபு விசயத்தில் இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தவாபு சேராது என்று சொல்லியிருப்பதாகவும்,  மற்ற மூன்று இமாம்கள் சேரும் என்று சொல்லியிருப்பதாகவும் ஆனால் நாம் இமாம் ஷாபி அவர்கள் எழுதிய கிதாபை அகற்ற முற்படவில்லை  அதே போன்று ஹதீது கிதாபுகளில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகள் இருக்கத்தான் செய்கின்றன அதை அகற்ற முற்படவில்லை அதேபோல்தான் இதுவும் என்று சொன்னார்கள். ஆகவே இந்த நூலில் உள்ள வாசகத்தை அகற்றத் தேவையில்லை என்றும் சொன்னார்கள்.

இவர்கள் சொன்ன ஷாபிஈ இமாம் அவர்களைப் பற்றி  சொன்னக் குற்றச்சாட்டு மிகவும் ஒரு வடிகட்டிய பொய் என்பதில் சந்தேகமில்லை. ஷாபிஈ இமாம் அவர்கள் அப்படி சொல்லவேயில்லை. இதுதான் இவர்கள் படித்த இலட்சணம்???

ஷாபிஈ இமாம் அவர்கள் ஈஸால் தவாப் பற்றி சொன்னது என்ன?  இறந்தவர்களுக்கு ஈஸால் தவாபு செய்யும் போது அந்த தவாபு (ع)அப்படியே போய் சேராது, அதுமாதிரி مثال தவாபுதான் போய் சேரும் என்றல்லவா? சொல்லியிருக்கிறார்கள். 

அதாவது தவாபு சேரும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை, மாறாக தவாபு அப்படியே சேருமா? அது மாதிரி தவாபு சேருமா என்பதில்தான் கருத்து வேறுபாடு உள்ளது. இதைக் கூடத் தெரியாமல், முற்றும் படிக்காமல் என்னதான் ஆலிம்களுக்கு ஓதினார்களோ? தெரியவில்லை.

இந்தமாதிரிதான் காயல்பட்டணத்தில் ஒடுக்கு பத்வா என்று ஒன்று வெளியிட்டு அதில் 40ம் கத்தம், வருட கத்தம் ஓதுவது கூடாது என்று கூறினார்கள். அதற்கு தகுந்த பதிலடி கொடுத்தும் திருந்தவில்லை. பகிரங்கமாக விவாதத்திற்கு அழைத்தும் ஓடி ஒளிந்ததார்கள். அதன் முயற்சியின் பிரசுர நல்கலைப் பார்க்க:

மஹ்லறத்துல் காதிரிய்யா சபை மூலம் ஒடுக்கு பத்வா பற்றி விவாதிக்க தயார் என்று பகிரங்கமாக வெளியிடப்பட்ட நோட்டீஸ் பிரதியில்
அடங்கியிருக்கும் விசயம்:

காயல்பட்டணம் பொதுமக்களுக்கோர் அறிவிப்பு

 

காயல் நகரமே உனது அவலநிலை என்ற தலைப்பில் என்.எம். அபூபக்கத் என்ற கை ஒப்பத்துடன் சமீபத்தில் வெளியிடப்பட்ட நோட்டீஸில் மஹ்லறா முதர்ரிஸ் அவர்களையும் மேற்படி நிர்வாகிகள் மேற்படி ஸ்தாபனம் இவைகளைப் பற்றியும் அவதூறாக பேசி மட்டரகமான முறையில் வாசகம் எழுதப்பட்டு வெளிவந்ததை எங்கள் பார்வைக்கு வந்தது. மேற்படி நோட்டீஸ் விஷயமாக மஹ்ழறா ஸ்தாபன உறுப்பினர்களால் மஹ்ழறாவில் 18-8-67 வெள்ளிக்கிழமை மாலை நடந்த ஊர் மக்கள் கூட்டத்தில,;


மேற்படி நோட்டீஸில் காட்டப்பட்டிருக்கிற ஆதாரங்களை குறிப்பிட்டு மஹ்ழறா முதர்ரிஸ் அவர்களிடம் சபையோரால் விளக்கம் கேள்க்கப்பட்டது. உலமாக்களுக்கும் சபைக்கும் முன்னிலையில் முதர்ரிஸ் அவர்கள் அந்த வெளியீட்டில் காட்டப்பட்டிருக்கும் ஆதாரங்களில் சில கிறந்தங்களில் இருக்கும் இமாம்களின் வாசகத்தை மறைத்தும் மற்றும் சில திரித்தும் உண்மைக்குப் புறம்பாக வெளியாக்கப்பட்டிருக்கிறது. அவ்வண்ணம் மறைக்காமலும் பிரட்டி அனத்தம் செய்யாமலுமிருந்தால் அவரின் தாவாவான ஒடுக்கு மய்யவாடிக்கு கொண்டு போவதும் கொடுப்பதும் மக்ரூஹ் என்பது நிரூபணம் ஆகாது என்று மேற்படி முதர்ரிஸ் அவர்கள் கூறிய விளக்கத்தை உலமாக்களாலும் சபையோராலும் சம்மதிக்கப்பட்டது.


மேற்படி நோட்டீஸ் விஷயமாக மேற்படி கூட்டத்தில் 7 ஏழு பேர் கொண்ட கமிட்டியை ஏகமனதாக தேர்ந்ததெடுத்து இக்கமிட்டியார் என்.எம். அபூபக்கர் என்ற நபரிடம் நேரில் சென்று கேள்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அன்று இரவு மேற்படி 7 பேர் கொண்ட கமிட்டியர்கள் மேற்படி என்.எம். அபூபக்கர் அவர்களிடம் நேரில் சென்று கேட்டதில், நான் நோட்டீஸ் போடவில்லை. நோட்டீஸுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று மறுத்துக் கூறிவிட்டார். அதன்பின் இவ்வேழு பேர் கொண்ட கமிட்டியர்கள் ஜாவியா மத்ரஸாவுக்கு சென்று கனம் ஷாதுலி ஹாஜி கனம் முத்துவாப்பா ஹாஜி இவர்களிடத்தில் கேட்டதில் அந்த நோட்டீஸ் எங்கள் ஜாவியா மத்ரஸா அனுமதியில் பிரசுரிக்கப்பட்டதல்ல. அந்த நோட்டீஸுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்ற தாக்கலையே சொல்லிவிட்டார்கள். ஊர் நன்மைக்கும் ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும் ஒரு சதிகார கூட்டம்தான் இப்படிப்பட்ட நோட்டீஸ் வெளியிட்டிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சம்.

இன்னும் தருமம் கொடுப்பது ஆகும் என்பதற்கு ஆதாரத்துடன் ஸவாலுக்கு ஜவாபாக நாங்கள் ஏற்கனவே பத்வா பிரசுரித்திருப்பதை பொதுமக்கள் பார்த்து புரிந்து கொள்ள வேண்டியது. மேலும் விளக்கம் கேட்டு விளங்கிக் கொள்ள விரும்புபவர்கள் தாறாளமாக வந்து கேட்டு விளங்கிக் கொள்ளும்படி மஹ்ழறத்துல் காதிரிய்யா காரிய கமிட்டியர் விருப்பத்துடன் கேட்டுக் கொள்கிறார்கள். வேணும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
                                                                                                இங்ஙனம்
22-8-1967                     மஹ்ழரத்துல் காதிரிய்யா மானேஜர். ஹாஜி விளக்கு
                                                                               முஹம்மது முஹிய்யத்தீன்
                                        செக்ரெட்ரி ஹாஜி.அப்துற் றஷீத்.


என்றும் எப்பொழுதும் வாதாட தயார்

அன்புடையீர்!            அஸ்ஸலாமு அலைக்கும்.
அறிவுடையீர்!,
பொதுமக்கள் மத்தியில், பொதுமக்களுக்கோர் நற்செய்தி என்னும் தலைப்புடன் வெளிவந்த துண்டு பிரசுரம் எங்கள் பார்வைக்கு கிட்டியது.
பார்த்தோம், அதை நாங்கள் பரிசீலனை செய்தோம். அந்த துண்டு பிரசுரத்தில் பல நூற்றாண்டு காலமாக அல்லாஹ்வின் நல்லடியார்களான நாதாக்களும், மகாமாமேதைகளும், நடத்தி வந்ததும் இன்னும் முஸ்லீம் பெருங்குடி மக்களால் நடத்தி வரப்படுவதுமான, 'ஒடுக்கு' என்ற சதக்கா கொடுத்தலை ஆகும் என்று நம் மஹ்ழறத்துல் காதிரிய்யா ஸதர் முதர்ரிஸ் அவர்களால் வழங்கப்பட்ட நல்லதொரு தீர்ப்பை மறுக்கப்பட்டிருந்ததைக் கண்டு மனம் வருந்தினோம்.
ஏற்கனவே, இந்நகரிலுள்ள முக்கியமான சில உலமாக்களுக்கும் நம் முதர்ரிஸ் அவர்களுக்குமிடையே, கடிதத்தின் மூலம் இவ்விவாதம் நடைமுறையில் நடந்து கொண்டும், நம் முதர்ரிஸ் அன்னவர்களால் அவர்களுக்கு விபரமும், விளக்கமும தரப்பட்டும் பொதுமக்களுக்கென்று ஒரு பொதுமேடையை அமைத்து அந்த பொது மேடையில் விவாதிக்க (வாதாட) தயார் என்றும் உள்ளத் தூய்மையோடும், உறுதியோடும் சவால் விடப்பட்டு இருக்கிறது.
மேலும் விளக்கம்-விபரம் வேண்டுவோர்களுக்கு விளக்கமும் விபரமும் அறியாதவர்களுக்கும் அறிவும் பொரிவும் தருவதற்கும், விவாதிக்க(வாதாட) விரும்பினால், விவாதிக்கவும் வாதாடவும் தயார் என்று 22-8-67-ல் நாங்கள் வெளியிட்ட பிரசுரத்திலும் கூறுp இருக்கின்றோம்.
இன்னும் அவர்கள் விரும்பினால் பொதுவான மூன்று முப்திகளின் முன்னிலையில் விவாதிக்க(வாதாட) என்றும் எப்பொழுதும் நாங்கள் தயார் என்பதை இந்த பிரசுரம் மூலம் தெரிவித்துகு; கொள்கிறோம். வஸ்ஸலாம்.
                                                                                                                  இங்ஙனம்
                                     மானேஜர், ஹாஜி. விளக்கு முஹம்மது   முஹிய்யித்தீன்,
               மஹ்ழறத்துல் காதிரிய்யா சபை காரிய கமிட்டியார், காயல்பட்டினம்.

இந்த ஜாவியா மத்ரஸாவின் பத்வாவினால் காயல்பட்டணத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை உலமாக்கள் கலந்து பேசுவதின் மூலம் தீர்த்து ஊரில் ஒற்றுமையை ஏற்படுத்திட 'சன்மார்க்க ஊழியர் குழு' அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதில் N.மு.ஆ. இபுறாஹீம்(மவ்லானா), ஆ.மு.ளு.யு. தாஹிர், P.ளு. முஹிய்யத்தீன், ளு.ஆ.டீ. மஹ்மூது ஹுஸைன், வு.ளு.யு.ஜிப்ரீ, ளு.மு.ஆ. சதக்கத்துல்லாஹ், மு.ஆ.மு. காதிர் சுலைமான் ஆகியோர் குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள். அவர்கள் வெளியிட்ட பிரசுரத்தின் நகல்கள்:
 
அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை அந்தக் குழு விளக்கமாக பிரசுரத்தின் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்தியது. அதன் நகல்:


'காயல்பட்டினத்தில் உலமாக்கள் மாநாட்டைக் கூட்டி வைக்க சன்மார்க்க ஊழியர் குழுவினர் எடுத்துக் கொண்ட முயற்சியின் விளக்கம்'
 



வெளியிடப்பட்ட நோட்டீஸ் பிரதியில் அடங்கியிருக்கும் விசயம்:

அன்புக்குரிய முஸ்லிம் சகோதரப் பெருமக்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த 16-11-67-ல் சன்மார்க்க ஊழியர் குழு'வினால் அதன் அமைப்பாளர்களின் பெயர்களுடன் வெளியிடப்பட்டு உங்களின் மேலான பார்வைக்கு வந்திருந்த அறிவிப்பு வேண்டுகோள்! என்ற பிரசுரத்தில் குறிப்பிட்டு இருந்தபடி கண்யமிக்க உலமாக்களை அணுகி, 'உலமாக்கள் மாநாடு' கூட்டுவதற்காக அவர்களின் உளப்பூர்வமான ஒப்புதலை பெறுவதற்கான பெருநோக்கத்துடன் 17-11-67 மாலை 5மணியளவில் மேற்படி சன்மார்க்க ஊழியர் குழுவைச் சேர்ந்தவர்களான ஜனாப் N..K.M.. இபுறாஹீம்(மவ்லானா)M.K.S.A. தாஹிர், P.S. முஹிய்யித்தீன், S.M.B. மஹ்மூது ஹுஸைன் T.S.A.. ஜிப்ரீ ஆகியோர் முதன்முதலாக ;மஹ்ழறத்துல் காதிரிய்யா'வுக்குச் சென்று அங்கு இருந்த ஜனாப் ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் நூரி ஸூபி ஹஜ்ரத் அவர்களைச் சந்தித்து உலமாக்கள் கூடிப்பேசுவதற்கான ஒப்புதலைக் கேட்டார்கள். அதற்கு ஸூபி அவர்கள் குழுவினரை நோக்கி எந்தப் பிரச்சனைகளைப் பேசுவது எந்த இடத்தில் என்று கேட்டதுடன் மற்ற ஆலிம்களின் ஒப்புதலைப் பெற்று விட்டீர்களா? என்றும் கேட்டார்கள். அதற்குக் குழுவினர்கள் தற்போது ஒடுக்குப் பிரச்னையும், தப்லீகு சம்பந்தமான பிரச்னையும் தான் பிரதானமானதாயிருக்கின்றது. மேலும் எந்தெந்நத பிரச்சனைகளைப் பேசித் தீர்வு காணுவது என் பதையும், காலம், இடம் மற்ற விபரங்களையும் தெரியப்படுத்துகிறோம். எங்கள் வேண்டுகோளை மதித்து ஆதரவு தெரிவித்து முதலில் பிரசுரம் வெளியிட்டது தாங்கள்தான். எனவே முதலாக தங்கள் ஒப்புதலைக் கோரி வந்துள்ளோம் என்றும் கூறினார்கள். அதுகேட்டு ஸூபி அவர்கள் ஒப்புதல் தந்ததற்கு அடையாளமாக குழுவினரின் புத்தகத்தில் கையொப்பமிட்டார்கள். அதைத் தொடர்ந்து பக்கத்தில் அமர்ந்திருந்த மஹழறா முதர்ரிஸ் ஜனாப் M.S.M. அப்துல் காதிர்பாகவி அவர்களும், ஜனாப்.S.M.H.. முஹம்மது ஸைபுத்தீன் ஆலிம்(ரஹ்மானி-பாகவி) அவர்களும் கையொப்பமிட்டார்கள். அப்போது ஸூபி அவர்கள் மார்க்க சம்பந்தமான சர்ச்சைகளை ஒருவருக்கொருவர் வினவி தெளிவு பெற்று ஒற்றுமையுடன் வாழ்வதையே நாங்கள் குறிக்கோளாக கொண்டிருப்பதால் நீங்கள் எப்போது அழைக்கின்றீர்களோ அப்போது அங்கு வந்து தெளிவுபட விளக்கந்தரத் தயாராயிருக்கிறோம் என்று கூற குழுவினர்கள் விடை பெற்றுச் சென்றனர்.

18-11-67 இரவு 8 மணியளவுக்கு சன்மார்க்க ஊழியர் குழுவைச் சார்ந்தவர்களான M.K.S.A. தாஹிர், S.M.B.மஹ்மூது ஹூஸைன், N.K.M.. இபுறாஹிம் (மவ்லானா) S. செய்யிதஹ்மது S.K.M. ஸதக்கத்துல்லா,T.S.A.ஜப்ரீ, K.M.K. காதிர் சுலைமான் ஆகியோர் அல்ஜாமிஉல் ஜும்ஆ மஸ்ஜீத்துக்கு அங்குள்ள உலமாக்களை சந்தித்து ஒப்புதல் பெறும் நோக்கத்துடன சென்றார்கள். அச்சமயம் அங்கு ஜனாப் ஸெய்யிது இபுராஹிம் ஆலிம் ஹாபிஸ்(முப்தி) ஜனாப் அல்ஹாஜ் சா.சாஹுல் ஹமீது ஆலிம் ஹாபிஸ்(முப்தி)ஜனாப் அல்ஹாஜ் தை. ஷைய்கு அலி ஆலிம் ஆகிய உலமாக்களும், ஜனாப் வா.செ. ஸதக்கு தம்பி ஹாஜியார் ஜனாப் S.A.ஹபீபு ஹாஜியார், ஜனாப் A.K.சாகுல் ஹமீது ஹாஜியார் போன்ற பிரமுகர்களும் வீற்றிருந்தார்கள். அப்போது குழுவினர்கள் தாங்கள் அங்கு வந்த நோக்கத்தை ஜனாப். ஸெய்யிது ஆலிம் அவர்கிடம் கூறி ஒப்புதல் கேட்டார்கள். அப்போது S.A. ஹாஜ்யார், A.K.S. ஹாஜியார் போன்ற பிரமுகர்கள் மவ்லூத், ஜியாரத் இவைகளைப் பற்றி 'உலமாக்களுக்கு ஒரு வேண்டுகோள்' என்ற பிரசுரத்தில் குறிப்பிட்எருப்பதை சுட்டிக் காட்டி மவ்லிது, ஜியாரத் ஆகாது என்று யார் சொன்னார்கள்? சொல்லாதவைகளை பிரச்சனைக்கு வராதவைகளை ஏன் நீங்கள் பிரசுரத்தில் போட்டு குட்டையைக் குழப்புகிறீர்கள் என்று சரமாரியான கேள்விகளை கேட்கத் துவங்கினார்கள். அப்போது, குழுவைச் சேர்ந்த செய்யிது அஹ்மது அவர்கள் அப்படியானால் எந்த ஆலிமும், எந்த ஒரு மார்க்க மேடையிலும் மவ்லூத், ஜியாரத் இவைகள் குறித்துப் பேசவே இல்லையா? என்று அமைதியான கேள்வியை எழுப்பியதைத் தொடர்ந்து ஜனாப் ஸெய்யிது ஆலிம் அவர்கள் எதிரே இருந்த S.K.M. ஸதக்கத்துல்ல அவர்களை நோக்கி 'பர்ளு' தொழுகை களாவாயிருக்கும் நிலையில் சுன்னத்  தொழுவது கூடுமா? என்று கேட்க, அதற்கு ஸதக்கத்துல்லா அவர்கள் கூடாது என விடையிறுக்க இதுபோன்ற அடிப்படையில்தான் நான் மவ்லூது, ஜியாரத் பற்றிப் பேசியிருப்பேன். மேலும், குர்ஆன் அல்லாத மற்றவைகளை பொருள் தெரியமாமல் ஓதுவதில் பாஇதா(பலன்) இல்லை. இந்தக் கருத்தில்தான் நான் பேசியிருப்பேன் என்று ஜனாப் ஸெய்யிது ஆலிம் அவர்கள் கூறினார்கள். இந்த நேரத்தில் வாதத்தை வளர்த்துக் கொண்டு போனால் வந்த நோக்கத்திற்கு இடையூறு வரும் என்று கருதிய குழுவினர் -அப்படியென்றால் மவ்லூது, ஜியாரத் பிரச்சனைகளை விட்டுவிடலாம். உலமாக்கள் பேரவையில் எந்தெந்நதப் பிரச்னைகளையெல்லாம் பேசித் தீர்வு காண்பதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு ஆலிம் அவர்கள் 1) ஒடுக்கு பத்வா 2) தப்லீக் என்று கூறி வருகையில் ஆலிமுல் கைபு, ஸுஜூது இவைகள் பற்றி ஈமான் பறிபோகும் அளவுக்கு ஸுபி ஹஜ்ரத் அவர்கள் தப்புந்தவறுமாக பேசியிருக்கிறார்கள். அவர்கள் பேச்சைப் பதிவு பண்ணி டேப் ரிக்கார்டரில் வைவத்துள்ளோம். எனவே மேலே சொன்ன ஒடுக்கு பத்வா, தப்லீக் ஆகியவற்றுடன் ஆலிமுல் கைபு, ஸுஜூது இவைகளும் உலமாக்களின் விவாதத்தில் இடம்பெற வேண்டும் என்று கூறியதுடன், மேலே கண்ட நான்கு இஷுக்குகளையும் ஸூபி ஹஜ்ரத் அவர்களிடம் சொல்லி ஒப்புதல் பெற்று வந்தால் நாங்களும் ஒப்புதல் தருகிறோம் என்று சொன்னதும் குழுவினர் விடை பெற்றனர்.

19-11-67 மாலை குழுவினரைச் சேர்ந்த ஜனாப். ளு.யு. தாஹிர் P.ளு.முஹிய்யித்தீன், ளு.மு. ஸதக்கத்துல்லா ஆகியோர் ஸூபி ஹஜ்ரத் அவர்களை முஹிய்யித்தீன் பள்ளியில் சந்தித்து 17-11-67-ல் அல்ஜாமிஉல் அஸ்ஹரில் ஜனாப் ஆ.மு. ஸெய்யிது இபுறாஹீம் ஆலிம் அவர்களால் தரப்பட்ட ஒடுக்கு பத்வா, தப்லீக், ஆலிமுல் கைபு, ஸுஜூது ஆகிய இஷுக்கள் நான்கையும் உலமாக்கள் பேரவையில் பேசித்தீர்வு காண ஒப்புதல் கேட்டார்கள். அதற்கு ஸூபி ஹஜ்ரத் அவர்கள் ஒடுக்கு பத்வா, தப்லீக் இரண்டையும் பற்றிப் பேசத் தயார். ஆலிமுல் கைபு அல்லாஹ்தான் என்பதையோ, அல்லாஹ் அல்லாத ஒன்றுக்கு ஸுஜூது செய்வது ஆகாது என்பதையோ நான் மறுக்கவில்லை. இப்படியிருக்க அவை இரண்டையும் ஏன் விவாதிக்க வேண்டியவைகளில் இணைக்க வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு குழுவினர் தாங்கள் ஆலிமுல் கைபு, ஸுஜூது இவைகள் பற்றி தப்புந்தவறுமாக பேசியிருப்பதாகவும் அந்தப் பேச்சு டேப்திகார்டரில் தம்மிடம்இருப்பதாகவும் ஜனாப். ஸெய்யிது ஆலிம் அவர்கள் கூறுகிறார்களே என்றனர். அதற்கு ஸூபி ஹஜ்ரத் அவர்கள் என்னுடைய பேச்சை அவர்கள் தவறாகப் புரிந்திருக்கலாம். மேலும் அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்த நான் கலீபா அப்பா அவர்கள் தைக்காவில் பேசும் போது என்னுடைய கருத்தை விளக்கிப் பேசியிருக்கிறேனே எனவே ஆலிமுல் கைபும், ஸுஜூதும் பிரச்சனைக்குரிய ஒன்றல்ல. ஒடுக்கு பத்வா, தப்லீகு இரண்டையும் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு ஒப்புதல் தருகிறேன் என்றாலும் ஆலிமுல் கைபு, ஸுஜூது இவைகளையும் பற்றி விவாதித்துதான் ஆக வேண்டுமென்று அவர்கள் சொன்னால் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்கள்.
20-11-67 மாலை குழுவினரைச் சேர்ந்த ஜனாப்கள் N.K.M. இபுறாஹீம் (மவ்லானா) K.P. பக்கீர் மவ்லானா, ஆ.மு.ளு.யு. தாஹிர் ஆகியோர் ஜனாப் ஆ.மு. ஸெய்யிது இபுறாஹீம் ஆலீம்முப்தி அவர்களை அவர்களின் வியாபார ஸ்தலமான பட்டறையில் சந்தித்து 19-11-67-ல் ஸூபி ஹஜ்ரத் அவர்களைச் சந்தித்ததையும் அன்னவர்கள் தந்த பதிலையும் சொன்னார்கள். அதற்கு செய்யிது ஆலிம் முப்தி அவர்கள் தப்ந்தவறுமாகத்தான் பேசியதை அப்படிப் பேசவில்லை என்று மறுக்கிறார்கள். சரி போகட்டும். ஒடுக்கு பத்வா, தப்லீக் இரண்டையும் பற்றியே பேசுவோம் . நாளை வாருங்களேன் என்று கூறினார்கள்.
21-11-67 காலை குழுவைச் சேர்ந்த ஜனாப்கள் N.K.M. இபுறாஹீம் (மவ்லானா) M.K.S.A. தாஹிர் ஆகியோர் பட்டறைக்குச் சென்று ஆலிம் அவர்களிடத்தில் ஒப்புதல் கேட்டார்கள். ஒரு சிலரைக் கலந்து பேசிக் கொள்ள வேண்டியதிருக்கிறது பேசிக் கொண்டபிறகு ஒப்புதல் தருகிறேன் என்று ஆலிம் அவர்கள் பதில் சொல்லிவிட்டார்கள். அன்று மாலை 5 மணியளவில் ஜனாப்.M.K.S.A. தாஹிர் S.M.B. மஹ்மூது ஹுஸைன் இருவரும் பட்டறைக்குச் சென்று ஆலிம் அவர்களிடம் காணவேண்டியவர்களைக் கலந்து பேசினீர்களா ஒப்புதல் தருகிறீர்களா? என்று கேட்டதற்கு சாஹுல் ஹமீது ஆலிம் இன்னும் சந்திக்கவில்லை. சந்தித்துப் பேசிவிட்டு சொல்கிறேனே என்று ஆலிம் அவர்கள் சொன்னதுடன் ஒப்புதல் கையெழுத்துப் பெறுவதற்காக குழுவினரால் புத்தகத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்த விவாதத்திற்குரிய 'இஷு' மற்றும் விபரங்களுக்கு ஒரு நகல் எழுதித்தந்தால் நல்லது என்றும் கேட்டார்கள். உடனே அங்கு(பட்டறையில்) வைத்தே ளு.ஆ.டீ. மஹ்மூது ஹுஸைன் ஒரு நகல் எழுதி ஆலிம் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு இருவரும் வெளியில் வந்து விட்டனர்.
22-11-67 காலை குழுவைச் சேர்ந்த ஆ.மு.ளு.யு. தாஹிர் ளு.ஆ.டீ. மஹ்மூது ஹுஸைன் ஆகிய இருவரும் பட்டறைக்குச் சென்று அவர்களிடம் ஒப்புதல் கேட்க அதற்கு ஆலிம் அவர்கள் இன்று மாலை அல்ஜாமிஉல் அஸ்ஹரில் ஆலிம்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அங்கே ஒரு முடிவு செய்து ஒப்புதல் தருவோம் என்று கூறினார்கள்.
23-11-67 காலை குழுவைச் சேர்ந்த M.K.S.A. தாஹிர் S.M.B,. மஹ்மூது ஹுஸைன் S. ஸெய்யிது அஹ்மது ஆகியோர் பட்டறைக்குச் சென்றபோது அங்கு ஆலிம் அவர்கள் இல்லை. அங்கு இருந்த ஆலிம் அவர்களின் மைத்துணரான ஜனாப் ஸாலிஹ் அவர்கள் ஆலிமவர்கள் வெளியூர் சென்றிருப்பதாகவும், இர வுநடந்த ஆலிம்கள் ஆலோசனைக்  கூட்டத்தின் முடிவை S.A. ஹபீபு ஹாஜியாரிடமாவது கேட்டுக் கொள்வீர்களாம் என்று சொன்னதன் பேரில் மேற்படி மூவரும் ஜனாப் S.A. ஹபீபு ஹாஜியாரின் வீட்டுக்குச் சென்று அவர்களைச் சந்தித்து ஸெய்யிது ஆலிம் சாஹிப் அவர்கள் தங்களிடம் என்ன முடிவு சொன்னார்கள் என்று கேட்டனர். அதற்கு ஹாஜியார் அவர்கள் நீண்ட நேரம் பல பிரச்னைகள் பற்றிப் பேசிவிட்டுக் கடைசியாக இது சம்பந்தமாக பேசி சன்மார்க்க ஊழியர் குழுவுக்கு ஒப்புதல் தரும் பொறுப்பை உலமாக்கள் நான் L.K. காழி ஹாஜியார் A.k. சாஹுல் ஹமீது ஹாஜியார், செய்யிது அஹ்மது முத்துவாப்பா ஆகியோர் கொண்ட கமிட்டியிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். எனவே நாங்கள் நால்வரும் ஒரு வர்க்கொருவர் கலந்து பேசி இன்னும் இரண்டொரு நாட்களில் முடிவு சொல்கிறோம் என்று கூறியதும், குழுவைச் சேர்ந்த மேற்படி மூவரும் ஹாஜியார் அவர்கள் வீட்டிலிருந்து வெளியாயினர்.
25-11-67 காலை குழுவைச் சேர்ந்த N.KM. இபுறாஹீம்(மவ்லானா) M.K.S.A. தாஹிர், K.P. பக்கீர் மவ்லானா S.M.B. மஹ்மூது ஹுஸைன் ஆகியோர் மீண்டும் பட்டறைக்குச் சென்று ஆலிம்கள் கூட்டம் நடந்திருக்குமே அதில் என்ன முடிவு செய்தீர்கள் ஒப்புதல் தரலாமல்லவா? என்று கேட்டனர். அதற்கு ஆலிம் அவர்கள் ஆலிம்களாகிய நாங்கள் 1) ஜனாப்.S.A.ஹபீபு ஹாஜியார் 2) L.K. காழி ஹாஜியார் 3)A.K.சாஹுல் ஹமீது ஹாஜியார் 4) செய்யிது அஹ்மது முத்துவாப்பா ஆகியோர் கொண்ட கமிட்டியொன்றை அமைத்து சன்மார்க்க ஊழியர் குழுவாகிய உங்களுக்கு முடிவு சொல்லும் பொறுப்பை அதனிடமே ஒப்படைத்திருக்கிறோம். ஆகவே நீங்கள் இனிமேல் அந்தக் கமிட்டியாரிடமே அணுகி முடிவு தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள். ஆகவே நீங்கள் இனிமேல் அந்தக் கமிட்டியாரிடமே அணுகி முடிவு தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள். இதற்கு குழுவைச் சேர்ந்தவர்கள் அந்தக் கமிட்டியாரை அணுகுவதற்கு நாங்கள் தயாராக இல்லை. அந்தக் கமிட்டியினரின் முடிவைக் கேட்டு தாங்களே எங்களிடம் விளக்கி ஒப்புதல் தர வேண்டும் என்றதுடன் பலமுறை தங்களிடம் வந்தபிறகும் கூட இன்னும் ஒரு முடிவே ஒப்புதலோ தரவில்லையே என்றும் கேட்டனர். அதற்கு ஆலிம் அவர்கள் சரி சரி நான் கமிட்டியினரைக் கலந்து குழுவினர் அவசரப்படுகிறார்கள் என்று முடிவை என்று சொல்லி முடிவை நாளைக்குத் தெரியப்படுத்துகிறேன் என்று சொல்லி விட்டார்கள்.
மேற்கூறிய பதிலைக் கேட்ட குழுவைச் சேர்ந்த மேற்படி நால்வரும் மற்ற ஆலிம்களையும் தனித்தனியே சந்தித்து அவரவர்களின் அபிப்பிராயங்களைத் தெரிந்து கொள்வது என்ற நோக்கத்தில் முதலாவதாக ஜனாப் ஐதுரூஸ் ஆலிம் ஹாபிஸ் பாகவி அவர்களைச் சந்தித்து விஷயத்தைக் கூறி ஒப்புதல் கேட்டனர். அதற்கு மேற்படி ஹாபிஸ் பாகவி அவர்கள் நான் தனிப்பட்ட முறையில் நீங்கள்
கூட்டவிருக்கும் உலமாக்கள் மாநாட்டில் கலந்து வாதிக்கவும் விளக்கந்தரவும் தயாராயிருக்கிறேன். இருந்தாலும் இதற்கென முடிவு சொல்ல கமிட்டியொன்று அமைக்கப்பட்டிருப்பதால் அதற்கு நான் கட்டுப்பட வேண்டியவனாயிருக்கிறேன் என்று பதில் கூறியதுடன் நேற்று இரவே கமிட்டியில் ஒரு முடிவாகி அதன் விபரங்களையொரு பேப்பரில் குறிக்கப்பட்டு விட்டதே. அதை உங்களிடம் இன்னும் தரவில்லையா? அப்படியானால் நானே நேரில் பட்டறைக்குச் சென்று செய்யிது ஆலிம் அவர்களிடம் கலந்து அந்த தீர்மானத்தின் குறிப்பை வாங்கி S.M.B.  அவர்களிடம் கொடுத்து விடுகிறேனே என்றும் கூறினார்.
2) அடுத்தபடியாக மேற்படி குழுவைச் சேர்ந்த நால்வரும் புதுப்பள்ளிக்குச் சென்று புதுப்பள்ளியின் பேஷ் இமாமாகிய ஜனாப் T.A.S. செய்யிது முகம்மது பாகவி அவர்களையும் ஜனாப்.அல்ஹாஜ் மஹ்மூது சுலைமான் லெப்பை ஆலிம் அவர்களையும் சந்தித்து வந்த நோக்கதை;தைக் கூறினர். அதற்கு மேற்படி உலமாக்களும் மேற்படி நால்வர் கொண்டடி கமிட்டியார் என்ன கூறுகின்றார்களோ அதற்கு நாங்கள் கட்டுப்பட்டுத்தான் எந்த முடிவோ ஒப்புதலோ தர இயலும். எங்களின் சொந்த அபிப்பிராயப்படி எந்த ஒப்புதலும் தருவதற்கு இல்லை என்று கூறிவிட்டனர்.
3) அடுத்தபடியாக மேற்படி குழுவைச் சேர்ந்த நால்வரும் ஜனாப் அல்ஹாஜ் வு.ளு.நு. ஷெய்க் அலி ஆலிம் அவர்களை முத்துவாப்பா தைக்காவில் சந்தித்து வந்த நோக்கத்தைக் கூறினர். அதற்கு ஷெய்கலி ஆலிம் அவர்கள் நீண்ட நல்லுபதேசம் புரிந்து குழுவினரின் முயற்சி தூய்மையானது எனவும், இந்த முயற்சி வெற்றி பெறப் பிரார்த்திக்கிறேன் என்றும் கூறிவிட்டு, என்னை உலமாக்களின் எந்தத் தரப்பிலும் சேர்க்காதீர்கள். இரு தரப்பிலுள்ள உலமாக்களின் குறைவு நிறைவுகளைத் தெரிந்து வைத்தவனாயிருக்கிறேன். எனவே என்னை நடுநிலை உலமாக்களின் அணியில் ஒருவனாக கருதி அந்த அடிப்படையில் ஒப்புதல் கேட்டால் இசைந்து ஒப்பமிடத் தயாராயுள்ளேன் என்று கூறினார்கள்.
26-11-67 மாலை குழுவைச் சேர்ந்த M.K.S.A தாஹிர் K.P. பக்கீர் மவ்லானா ஆகிய இருவரும் ஜனாப் ஸெய்யிது ஆலிம் அவர்களைக் காணும் நோக்கத்துடன் பட்டறைக்குச் சென்றனர் . ஆலிம் அவர்கள் அங்கு இல்லை என்பதையறிந்த அவர்களிருவரும், ஆலிம் அவர்களை வீட்டிலாவது போய் சந்திப்போம் என்ற நோக்கத்தில் கிழக்கே வந்து கொண்டிருக்கும் போது ஆறாம்பள்ளிக்கு அருகாமையாக பட்டறையை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஆலிம் அவர்களைச் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது ஆலிம் அவர்கள் குழுவைச் சேர்ந்த இருவரையும் பார்த்து, நான் S.A. அவர்களைச் சந்தித்துப் பேசினேன். நீங்கள் காழி ஹாஜியாரை சந்திக்கவில்லையாமே நீங்கள் S.A. ஹாஜியாரைக் கண்டு கலந்து பேசிக் கொள்ளுங்களேன் என்று கூறிக் கொண்டே பட்டறைக்குள் புகுந்து விட்டார்கள். மேற்படி இருவரும் எவ்வித பதிலும் பேசாமல் யோசித்தபடியே திரும்பிவிட்டனர்.
27-11-67 காலை குழுவைச் சேர்ந்த S.M.B. மஹ்மூது ஹுஸைன் அவர்கள் தனது வீட்டிலிருந்து பஜாரில் மேற்கு நோக்கிச் செல்வதற்காகப் பட்டறையைத் தாண்டி வரும்போது பட்டறைக்குள் அழைக்கப்பட்டார். பட்டறையில் அப்போது ஆலிம் அவர்களும், அவர்களின் மைத்துணரும், மகனாரும், S.A..ஹபீப் ஹாஜியார் அவர்களும் இருந்தார்கள். ளு.யு.ஹபீப் ஹாஜியார் அவர்கள் S.M.B. அவர்களைப் பார்த்து, நீங்கள் ஏன் குழப்பம் பண்ணிக் கொண்டு திரிகிறீர்கள் என்று கேட்க அதற்கு S.M.B. அவர்கள் என்ன குழப்பம் என்று கேட்க, ஹாஜியார் அவர்கள் நாங்கள்தான் கமிட்டியமைத்து இருக்கிறோமே நீங்கள் ஏன் உலமாக்களைத் தனித்தனியே சந்தித்துப் பேசுகிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு S.M.B. அவர்கள் இதுவரை உலமாக்களில் ஸெய்யிது ஆலிம் அவர்களை மட்டுமே அணுகியிருக்கிறோமேயன்றி மற்ற உலமாக்களை நேர்முகமாக அணுகவோ அவர்களின் தனிப்பட்ட அபிப்ராயங்களை அறியவோ இல்லை. ஆகவே மற்ற உலமாக்களையும் தனித்தனியே கண்டு பேசி அபிப்பிராயங்களை அறிந்து கொண்டோம். மேலும் மார்க்க சம்பந்தமாக பேசி மக்களுக்கு விளக்கி வைக்க வேண்டியவர்கள் உலமாக்கள்தானே. ஆகவேதான் உலமாக்களையே நேரில் அணுகி ஒப்புதல் கோரப்படுகிறது. உலமாக்கள் அல்லாத கமிட்டியை அணுக மறுக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கையில் ஆலிம் அவர்கள் பட்டறைக்கு எதிர் கடையில் நின்று கொண்டிருந்த ஒரு சிறுவனை அழைத்து இவன் சொல்றான் உங்கள் குழுவினரில் ஒருவர் உலமாக்களெல்லாம் பிரமுகர்களுக்கு அடங்கியவர்களாக இருக்கிறார்கள் என்று சொன்னதாகச் சொல்கிறான் என்றார்கள். அப்போது S.A. ஹாஜியார் அவர்கள் S.M.B. அவர்களைப் பார்த்து, எங்களையெல்லாம் நீங்கள் மிக மட்டமாக மதித்து இருக்கிறீர்கள் இல்லையா? உனக்கு என்ன யோக்யதாம்சம் இருக்கிறது, தகுதி இருக்கிறது, உனக்கு என்ன தெரியும் பாடல் இயற்றவும் மேடைகளில் பாடவும்தானே தெரியும் ஒழுங்காகப் பேசவாவது தெரியுமா அல்லது உங்கள் சன்மார்க்க ஊழியர் குழுவை சேர்ந்தவர்களுக்குத்தான் என்ன தகுதி திறமை இருக்கிறது. அறிவு இருக்கிறதா, பணம் இருக்கிறதா, ஒரு விவகாரத்தை அணுகும் ஆற்றல் இருக்கிறதா என்ன இருக்கிறது? உங்கள் ஊழியர் குழுவில் இருப்பவரெல்லாம் தொழாதவர்களும், நோன்பு பிடிக்காதவர்களும், ஜகாத் கொடுக்காதவர்களும், ஹஜ்ஜு செய்யாதவர்களுமாகத்தானே இருக்கிறார்கள் என்று ஆத்திரத்தோடு பேசி வருகையில் ஆலிம் அவர்கள் இடைமறித்து பணம் இருந்தால்தானே ஜகாத் கொடுக்க முடியும் என்று சொன்னார்கள். இந்தச் சூழ்நிலையில் ஏதாவது பதில் பேசி மேலும் ஆத்திரத்தைத் தூண்ட விரும்பாத ளு.ஆ.டீ. அவர்கள் சரி நான் வருகிறேன் என்று மவுனமாகப் பட்டறையிலிருந்து வெளியேறிவிட்டார்.
பட்டறையில் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சி பெருத் சப்தத்துடன் நிகழ்ந்தபடியால் பஜாரில் போவோர் வருவோரும் எதிர்ககடைகளில் பக்கத்துத் தேனீர் கடையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் பரபரப்புடனும், விபரமறியாத சிலர் ஆத்திரத்துடனும் குழுவினரை அணுகி, என்ன என்ன என்று கேட்கத் துவங்கினர். அவர்களுக்குத் தகுந்த பதில்களை குழுவினர் கூறி அனுப்பினர்.
அன்று இரவு 8-30 மணியளவுக்கு குழுவைச் சேர்ந்த N.M.K. இபுறாஹீம்(மவ்லானா) K.P. பக்கீர் மவ்லானா M.K.S.A. தாஹிர் ஆகிய மூவரும் ஜனாப் ஆ.மு. ஸெய்யிது இபுறாஹீம் ஆலிம் ஹாபிஸ் (முப்தி) அவர்களை அணுகி தீர்க்கமான அவர்களின் முடிவைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்திலும:, காலையில் பட்டறையில் நிகழ்ந்த சம்பவம் பற்றிக் கேட்டுத் தெளிவு பெறும் நோக்கத்திலும் அல்ஜாமிஉல் அஸ்ஹருக்குப் போனார்கள். ஆலிம் அவர்கள் சற்று முன்புதான் வீட்டுக்குப் புறப்பட்டார்கள் என்ற தகவலையறிந்த மேற்படி மூவரும் ஆலிம் அவர்களின் வீடு நோக்கிப் போய்க்கொண்டிருக்கையில் அலியார் தெருவில் ஆலிம் அவர்களை சந்தித்துக் கொண்டனர். நாடி வந்த நோக்கத்தையும் கூறினர். அதற்கு ஆலிம் அவர்கள் நாங்கள் அமைத்திருக்கும் நான்கு பிரமுகர்கள் கொண்ட கமிட்டியாரிடம் தான் நீங்கள் முடிவைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்கள். அதைக் கேட்ட மேற்படி மூவரில் ஒருவரான N.K.M. இபுறாஹீம் (மவ்லானா) அவர்கள் 10 தேதி 18 பேர் கையொப்பமிட்டு வெளியிடப்பட்ட முதல் பிரசுரமாகிய 'உலமாக்களுக்கோர் வேண்டுகோள்' என்ற பிரசுரத்தின் பிரகாரமும் அதன்பிறகு அமைக்கப்பட்ட சன்மார்க்க ஊழியர் குழுவின் அடிப்படைக் கொள்கைப்படியும் உலமாக்களாகிய உங்களைத் தான் நேர்முகமாக அணுகவோ ஒப்புதல் பெறவேண்டியவர்களாகவோ இருக்கிறமே தவிர உலமாக்களல்லாத பிரமுகர்கள் கொண்ட கமிட்டியினரை அணுகவோ ஒப்புதல் பெறவோ தயாராக இல்லை. எனவே நீங்கள் தான் ஒப்புதல் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன் காலையில் பட்டறையில் நடைபெற்ற சம்பவம் பற்றிக் குறிப்பிட்டு எங்கள் குழுவினரில் ஒருவரான S.M.B. அவர்களைத் தனியாக அழைத்து தனிபட அவரையும் சன்மார்க்க ஊழியர் குழுவையும் S.A. ஹாஜியார் அவர்கள்; தாக்கித் தரக்குறைவாகப் பேசியிருப்பது சரிதானா முறைதானா இத்தகையோர் கொண்ட கமிட்டியிடம் தானே எங்களை அணுகும்படி கூறுகிறீர்கள் என்றார்கள். அதற்கு ஆலிம் அவர்கள் அவன் S.M.B. என்ன கேட்டான் என்பது தெரியுமா என்று வினவ அப்பத் தவறாக என்ன கேட்டு விட்டான் என்று மவ்லான கேட்க ஆலிம் அவர்கள் பிரமுகர்கள் கொண்ட கமிட்டியரிடம் எங்களுக்கு வேலை இல்லை. எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிட்டானே என்றார்கள். இதைத்தானே நாங்களும் சொல்லுகிறோம்.குழுவின் திட்டமே இதுதானே என்று மேற்படி மூவரும் கூறினர். அதற்கு ஆலிம் அவர்கள் நாங்கள் அமைத்திருக்கும் பிரமுகர்கள் கொண்டி கமிட்டியினரின் அனுமதியில்லாமல் நான் எனது சொந்த ஹோதாவில் ஒப்புதல் தருவதற்கு தயாராக இல்லை. மேலும் உதாரணத்துக்காக நாங்கள் ஒரு மார்க்கத் தீர்ப்பை (பத்வா) வெளியிட எண்ணினால் அதற்கான செலவினங்களுக்கா மேற்படி பிரமுகர்களைத்தான் எதிர்பார்ப்பவர்களாகவும் அணுகவேண்டியவர்களாகவுமிருக்கிறோம். இன்னும் எங்களுடைய எந்தக் கருமத்துக்கும் அவர்களைக் கொண்டே முன்பின் தோதுகள் இருந்து கொண்டிருக்கிறது. எனவே மேற்படி பிரமுகர்கள் கொண்டி கமிட்டியின் அனுமதியின்றி ஏதும் ஒப்புதல் தரத் தயாராக இல்லை என்று தீர்க்கமாகக் கூறி விட்டார்கள். இது கேட்ட குழுவினர் மீண்டும் தொடர்ந்து அப்படியானால் நாங்கள் மேற்படி கமிட்டியாரைக் கலந்து ஆலோசித்து அவர்கள் தரும் முடிவை எங்களுக்குத் தாருங்கள் அதற்கான அவகாசம் வேண்டுமானால் தருகிறோம். இல்லை அந்தக் கமிட்டியாரைத் தான் நாங்கள் அணுக வேண்டும் என்று நீங்கள் தீர்மானமாகக் கூறுவதாயிருந்தால் நாங்கள் அவர்களை நேரில் அணுகவோ பேசவோ தயாராக இல்லை என்பதோடு இத்துடன் தங்களிடம் வருவதை நிறுத்திக் கொண்டு இதுவரை எங்கள் சன்மார்;க்க ஊழியர் குழு உலமாக்களை அணுகிப் பேசியவைகளையும் அதற்கு உலமாக்கள் அளித்த பதில்களையும் பிரசுரம் வாயிலாக அறிவிட்டு விட்டு மேற்கொண்டு ஆக வேண்டிய பணிகளைத் தொடர்கிறோம் என்று கூறினர். அதற்கு ஆலிம் அவர்கள் எத்தனை பிரசுரங்கள் நோட்டீஸ்கள் வந்தாலும் அது பற்றி எங்களுக்கு ஒன்றுமில்லை என்னுடைய தீர்க்கமான பதில் என்று கூற, குழுவினர் ஸலாம் கூறி விடை பெற்றனர்.

பேரன்புக்குரிய சகோதரப் பெருமக்களே!

தென் தமிழகத்தின் மாண்புயர் பதியாம் வான் புகழ் நமது காயல்பட்டினத்தில் கண்ணியமிக்க உலமாக்களிடையே சன்மார்க்க சம்பந்தமான சர்ச்சைகள் தோன்றியிருப்பதும், மார்க்கத் தீர்ப்பு(பத்வா) அதற்கு மறுப்பு போன்ற பிரசுரங்கள் வெளியானதும், சன்மார்க்க சொற்பொழிவு மேடைகளிலே ஒரு ஆலிமுக்கும் மற்றொரு ஆலிமுக்குமிடையே மாறுபட்ட கருத்து விளக்கங்கள் பேசி வருவதும், இத்யாதி காரணங்களால் சகோதரப் பெருமக்கள் குழப்பமடைந்து நிற்பதையும் நகரில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி வருவதையும் நீங்கள் அறிவீர்கள்.

இத்தகைய இழிவான சூழ்நிலையை மாற்றியமைத்திடவும் மார்;க்கத்தில் மக்களுக்குத் தெளிவான விளக்கத்தையூட்டிடவும் வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் விளைவாக நடுநிலை உணர்வு கொண்டவர்களால் தோற்றுவிக்கப்பட்டிருப்பதுதான் இந்த 'சன்மார்க்க ஊழியர் குழு' இந்தக் குழு எந்த ஒரு அரசியல் கட்சியையோ அல்லது நம் நகரின் எந்த ஒரு கட்சியையோ சார்ந்தது அல்ல. இந்த அடிப்படையில்தான் உலமாக்கள் பேரவையைக் கூட்டிவைத்து மார்க்கத்தின் விளக்கத்தை மக்களுக்கு ஊட்டுவதற்காக மதிப்புயர் உலமாக்களை நாங்கள் அணுகியதையும், அவர்களுடன் பேசியவைகளையும் அதற்கு அவர்கள் அளித்த பதில்களையும் சுருக்கமாக ஓரளவு விளக்கமாக உங்களின் பார்வைக்குத் தந்ததில் மகிழ்ச்சியடைகிறோம்.

இத்துடன் 'சன்மார்க்க ஊ ழியர் குழு'வின் பணிகள் முற்றுப் பெறவில்லை என்பதையும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் ஷவ்வால் மாதம் இறுதி வாரத்திலோ அல்லது துல்கஃதா மாதம் மத்தியிலோ ஒப்புதல் தரும் நம் நகர உலமாக்களையும், இன்னும் எமது அழைப்பின் பேரில் வருகை தரும் வெளியூர் உலமாக்களைக் கொண்ட 'உலமாக்கள் மாநாடு'ஒன்றைக் கூட்டி வைக்கவும் அதில் சன்மார்க்கத்தில் சர்ச்சைக்குரியவைகளை ஆய்ந்து தெளிந்து தீர்வு காணவும், அதன் வாயிலாக சுமுகமான சூழ்நிலையை உருவாக்கவுமான உயர்வான முயற்சியிலே முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளோம் என்பதையும் உங்களுக்குத் தெரியத் தருகிறோம். எனவே அன்புக்குரிய சகோதரர்களாகிய நீங்கள் இந்த நல்ல முயற்சிக்கு உங்களின் உள்ளப்பூர்வமான ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிப்பதுடன் 'சன்மார்க்க ஊழியர் குழு'வின் நல்லெண்ண அணியிலே உறுப்பினராக இணைந்தும் ஊக்குவிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

                                                                                                                 இவண்,
                                                                                                              
                                                                                                       12-1-1968                                                                                        
23 K.T.M. தெரு,                                                                                                               

                                                                                                            M.K.S.A. தாஹிர்,
காயல்பட்டணம்.                                                                          அமைப்பாளர்,                                              
                                                                                    சன்மார்க்க ஊழியர் குழு.


இதிலிருந்து ஊரில் ஆரம்பகாலத்திலிருந்தே பிரச்சனைகள் தோன்றக் காரணகர்த்தாக்கள் யார்? என்றும், விவாதத்திற்கு பயந்து ஓடி ஒளிந்தவர்கள் யார்? என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.)

அதுமாதிரி இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகள் பற்றி விபரித்து அதற்கென்று தனி கிதாபுகளே எழுதப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பிட்ட கிதாபில் உள்ள குறிப்பிட்ட ஹதீதுகள் பற்றி தெளிவாகவே குறிப்பிடப்பட்டு அதனுடைய தரத்தை எழுதப்பட்டிருக்கும். இதுவே அதற்கு மறுப்பானதாகும். ஆனால் ரஷீத் அஹ்மது கங்கோஹி கொடுத்த இந்த இரண்டு பத்வாக்களுக்கு மறுப்பாக அதைக் குறிப்பிட்டு ஏதாவது நூல் அல்லது மறுப்புரை பின்னால் வந்த தேவ்பந்த் உலமாக்களால் வெளியிடப்பட்டிருக்கிறதா? அதைக் காட்ட முடியுமா?
இதில் வேறு தேவுபந்தி, ஃபாஸி, காஸிமி என்று பின்னால் பட்டங்களைப் போட்டுக் கொண்டு மக்களை வழிகெடுக்க அலைகின்றார்கள் பாருங்கள். பொதுமக்களே! ஜாக்கிரதை! இந்த வழிகேடர்களிடமிருந்து உங்கள் ஈமானை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

சம்பந்த சம்பந்தமில்லாமல் பேசி ஒன்றுக்கொன்று முரணாகப் பேசி, யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டது போல் தங்கள் வழிகேட்டை தாங்களே வெளிப்படுத்தியிருக்கிறார்கள் பாருங்கள்.

இதில் ஒரு குற்றச்சாட்டைப் பற்றித்தான் பேசப்பட்டிருக்கிறது. இன்னும் அநேக குற்றச் சாட்டுகள் இருக்கின்றன. 'வஹ்ஹாபி காரிஜிகளைப் போன்ற வழிகெட்ட இயக்கம் என்றும், ரஷீத் அஹ்மது கங்கோஹி கொடுத்த இரண்டு பத்வாக்கள் இங்கு வந்த தப்லீகு ஜமாஅத்தை ஆதரிக்கும் உலமாக்களுக்கு உடன்பாடானது அல்ல' என்றும் எழுதப்பட்டு அனைவரிடமும் கையொப்பமும் வாங்கப்பட்டிருக்கிறது.

இந்தமாதிரி எழுதுவதற்காக அவர்கள் பட்டபாடு அந்த விவாதத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தெரிந்திருக்கும். இதுதான் தங்களுக்கு வெற்றி என்று நினைத்தார்கள். ஆனால் அல்லாஹ் அவர்களின் முகத்திரையை கொஞ்ச நாளில் கிழித்தெறிந்தான் பாருங்கள்!அதைப் பற்றி சுன்னத் வல் ஜமாஅத்தினர்கள் பலமுறை வெளியிட்ட பிரசுரத்தைப் பார்க்க:http://sufimanzil.org/articles/mahlara-ulamas-vs-zavia-ulamas

இதே மாதிரிதான் இலங்கையில் மாத்தறையில் 1965 ம் வருடம் தப்லீக் விவாத மாநாடு நடத்தப்பட்டு தப்லீக் ஜமாஅத்தினர்கள் தோற்று ஓடி பொது மக்களால் அடித்து விரட்டப்பட்டும், கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, தப்லீக் ஜமாஅத் வஹ்ஹாபியத்தான இயக்கம்தான் என்று நிரூபிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளபட்டதால் தாங்கள் அதிலிருந்து தப்பிப்பதற்காக 'இலங்கையில் உள்ள தப்லீக் ஜமாஅத்தில்தான் வஹ்ஹாபியத் இல்லை' என்று பிரசுரம் வெளியிட்டு நாங்கள் ஜெயித்து விட்டோம் என்று கூக்குரலிட்டு தாங்களே தீர்ப்பு ஒன்றை எழுதி வெளியிட்டார்கள். அதுவும் சில நாட்களிலேயே பொய் என்று நிரூபிக்கப்பட்டு தப்லீகு ஜமாஅத்தினர்கள் கேவலத்திற்குள்ளானார்கள் பாருங்கள்!  பிரசுரத்தைப் பார்க்க: http://sufimanzil.org/wp-content/uploads/downloads/2010/04/visakirumi.pdf

இதே நிலைதான் காயல்பட்டின தப்லீக் ஜமாஅத்தினர்களுக்கும் ஏற்பட்டது. அதாவது தப்லீக் ஜமாஅத்தின் தலைவரில் ஒருவரான ரஷீத் அஹ்மது கங்கோஹி முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியையும், அவர் கொள்கையையும் ஒப்புக் கொண்டு அதன்படி செயல்பட்டு வந்தார். அதனால் பத்வா வெளியிட்டார். அந்த பத்வாவில் எங்களுக்கு ஒப்புதல் இல்லை என்று கூறுவது ஏதோ சொல்வது போல் இருக்கிறது. இது மிகக் கேவலம் இல்லையா?; காயல்பட்டணம் தப்லீகினர்களுக்கும், இலங்கை தப்லீகினர்களுக்கும் உள்ள ஒற்றுமையைப் பாருங்கள். இவ்வாறுதான் உலகிலுள்ள அனைத்து தப்லீகினர்களும் பொய்யும், புரட்டோடு இருப்பார்கள் என்பதற்கு இந்த நிகழ்ச்சிகள் நமக்கு சான்றாக அல்லவா அமைந்திருக்கிறது.

காயல்பட்டணத்தில் நடத்தப்பட்ட விவாதம் எப்படி நடத்தப்பட்டது? நியாயமானதாக, நேர்மையானதாக நடத்தப்பட்டதா?

விவாதத்திற்கு முன் நடந்தது என்ன?

காயல்பட்டணத்தில் தப்லீக் ஜமாஅத்தினர்கள் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைக்கு மாற்றமாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதனால் சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தும் அவர்களின் தீய கொள்கைக் கோட்பாடுகளை மக்கள் மத்தியில் விளக்கியும் பேசி வந்தும் தப்லீக் ஜமாஅத்தினர் அதற்கெல்லாம் பதில் சொல்லாமால் தாங்கள் கொண்ட கொள்கையிலேயே உறுதியாக இருந்தது மட்டுமில்லாமல் அதை மக்கள் மத்தியில் பரப்பி அவர்களை வழி கெடுத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நடுநிலைவாதிகள் என்று  சொல்லிக் கொள்ளும் (?) சிலர் இதற்கு முடிவு காண வேண்டி இரு தரப்பாரையும் அழைத்து பேச முடிவு  செய்தனர். இதற்காக கடந்த ஜூன் 1998 அன்று அவர்கள் ஒவ்வொரு ஆலிமையும் சென்று பார்த்து அழைப்பு விடுக்க சென்றனர். இவ்வாறு சென்றவர்களில் மிக முக்கியமானவர்கள் வாவு சம்சுத்தீன், பாளையம் ஹபீபு முஹம்மது, வட்டம் ஹஸன் மரைக்கார் ஆகியோர்கள்.

இவர்கள் மட்டும் அழைப்பு கொடுக்கச் சென்றால் பரவாயில்லை. அது நடுநிலைமையான செயல்பாடுதான் என்று கருத முடியும். ஆனால் இந்த நடுநிலை(?)கள் செய்தது என்ன தெரியுமா? தப்லீகின் முகமூடியை தமிழ் பேசும் உலகில் கிழித்து உண்மைகளை விளக்கி வரும் அதுவும் இந்த விவாதத்திற்கு தப்லீக் எதிர்ப்பாளர்களில் மிக முக்கியமான ஆலிம்களில் ஒருவரான மௌலவி எஸ்.எம்.ஹைச். ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி அவர்களை அழைக்கச் சென்ற இவர்கள், தாங்கள் மட்டும் சென்றிருந்தால் இவர்களின் நோக்கம் நடுநிலையானது என்பது புரிந்திருக்கும். ஆனால் இவர்களோ தங்களுடன் தப்லீக் ஆதரவான ஆலிமான மௌலவி வதூத்  ஆலிம் அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். சென்ற அவர்கள் தாங்கள் வந்த நோக்கத்தை சொல்லி அதற்கான அழைப்பை விடுக்கவில்லை. மாறாக, மௌலவி அப்துல் வதூத் ஆலிமை பேச விட்டுள்ளனர். அவர் தம் முன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பவர்கள் தங்களை விட வயதான ஒருவர் படித்த ஆலிம் என்ற மரியாதைக் கூட இல்லாமல், கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு கேள்விக் கணைகளை தொடுத்திருக்கிறார். அதுவும் இவர்கள் சென்ற விசயத்திற்கு  சம்பந்தமில்லாத கேள்விகள்.

இதை இந்த நடுநிலையாளர்கள் (?) பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். சைபுத்தீன் ஆலிம் அவர்களும் அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நல்ல பதிலை சொல்லி இருக்கிறார்கள். இறுதியில் நீங்கள் என்ன விசயத்திற்காக இங்கு வந்துள்ளீர்கள்? என்று ஆலிம் அவர்கள் கேட்க, வந்தவர்கள் ஊரில் மார்க்க பிரச்சனைகளை ஆலிம்கள் ஒன்று கூடி பேசி தீர்க்க ஒரு கூட்டம் ஆலிம்கள் அனைவரையும் வைத்து போட வேண்டியதிருக்கிறது. அதில் தாங்களும் கலந்து கொள்ள வேண்டும் (தப்லீகு ஆதரவு குழுவினர்களிடம் விவாத நோக்கத்தை தெளிவாக சொல்லியும், தப்லீகு எதிர்ப்பு குழுவினரிடம் விபரத்தை சொல்லாமலும் அழைத்து ) என்று அழைப்பு விடுத்தனர். அவர்களும் இது மக்களுக்குரிய நல்ல விசயம்தானே! என்று இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டனர்.

இலங்கை மாத்தறையில் கடந்த 1965 ம் வருடம் நடைபெற்ற தப்லீகு ஜமாஅத் பற்றிய விவாத மாநாடு மாதிரி விசயத்தை காயல்பட்டணத்திலும் அரங்கேற்ற இந்த மூன்று நடுநிலையாளர்கள்(?) உட்பட சுன்னத் வல் ஜமாஅத்தினர்கள் போன்று நடித்து அக் கொள்கைக்கு எதிரியாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தலைமை தாங்கி வரும் எம்.எம். உவைஸ் ஹாஜி, வாவு காதர் ஹாஜி போன்றோர்களும் முற்கூட்டியே சதித் திட்டமிட்டு இந்த விவாத மாநாட்டை ஏற்பாடு செய்திருந்ததும் அந்த சதி  இதன் மூலம் அம்பலமாகிவிட்டது.

முனாபிக்குகளின் முகமூடி நார்நாராய் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது! அதை எடுத்து தைப்பதற்கு கனம் உவைஸ் ஹாஜி, வாவு காதர் ஹாஜி, பாளையம் ஹபீபு முஹம்மது, வட்டம் ஹஸன் மரைக்கார், வாவு சம்சுத்தீன் போன்ற நயவஞ்சகர்கள் முயல்வார்களா? பார்ப்போம்.

Friday, March 18, 2011

காயல்பட்டணம் சரித்திரம்

அப்பாஸிய பரம்பரையை சேர்ந்த ஹாரூன் அல்வாதிக் பில்லாஹ் என்ற அரசன் அரேபியாவை  ஆட்சி  செய்து  வரும்  வேளையில், தனது  நாட்டு  மக்களான குறைஷிகள், அஹ்லுபைத்துகள்  மற்றும் இமாம்கள்  ஆகியோர்களை தனது தவறான கொள்கையான புனித  குர்ஆன் படைக்கப்பட்டது  என்பதை நம்புமாறு மிகவும் வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்தான். ஆனால் அந்த நல்லோர்கள் அதை ஏற்க மறுத்து விட்டனர். 

ஹிஜ்ரி 227, 842 கிபி, எகிப்து  நாட்டிலுள்ள  முகத்தம்  மலையடிவாரம் அருகிலுள்ள கரஃபதுல் குப்ரா எனும் ஊரிலுள்ள மக்கள் ஒன்று கூடி தங்கள் சொந்த நாட்டை விட்டும் வெளியேறுவது என்று தீர்மானித்து, தத்தமது குடும்பத்தினர்களோடு 5 கப்பல்களில் கடல் மார்க்கமாக புறப்பட்டனர். ஹஜ்ரத் அபூபக்கர் ஸித்தீக் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் வழித்தோன்றல் செய்யது முஹம்மது கல்ஜி அவர்கள் தலைமையில் வந்த ஒரு கப்பல் இந்தியாவின்  தென்  பகுதி  தூத்துக்குடிக்கு  அடுத்துள்ள  காயல் என்னும் ஊருக்கு வந்து அடைந்தது. அப்பொழுது ஆட்சி புரிந்த பாண்டிய மன்னன் வந்த விருந்தினர்களை அன்போடு வரவேற்று, வசிக்க, வியாபாரம் புரிய இடமும் வழங்கினான். அந்த இடம் காயலில் இருந்து உதய மார்த்தாண்டன் நகர் (காட்டு மக்தூம் பள்ளி) வரை இருந்தது. அந்த இடத்திற்கு காஹிர்ஃபதன் என்று  பெயர்  சூட்டப்பட்டது. பின்பு  பேச்சு  வழக்கில்  தற்போதுள்ள 'காயல்பட்டணம்'   என்று மாறி விட்டது. 
 
1284 கிபி, எகிப்து நாட்டிலிருந்து ஹஜ்ரத் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின்  பரிசுத்த வமிசத்தை  சேர்ந்த  ஸுல்தான்  செய்யித் ஜமாலுத்தீன்  அவர்களின்  தலைமையில்  மக்கள்  வந்து காயல்பட்டணத்தில் குடியேறினார்கள். 1293 கிபி, மன்னன் சுந்தர பாண்டியன் மறைவுக்கு பிறகு ஸுல்தான் செய்யித் ஜமாலுத்தீன் அவர்கள் பாண்டிய அரசாங்கத்தை மிகச் சிறப்புடன் சில காலம் ஆட்சி செய்தார்கள்.  
 
தமிழில் காயல் என்பதற்கு கடலும் அதைச் சார்ந்த இடம் என்றும், பட்டணம் என்பதற்கு நகரம் என பொருள்படும். ஆகையால் காயல்பட்டணம் என்பதற்கு கடல் அருகே அமைந்துள்ள நகரம் என விளங்கப்படும். காயல் மிகவும் புராதன இடம். ஐயாயிரம்  ஆண்டுகளுக்கு  முன்பு  இரண்டாவது  தமிழ்  சங்கத்தின் தலைநகராக இது விளங்கியது. அப்பொழுது கபாடபுரம் என்று அழைக்கப்பட்டது. இந்தியாவின்  முதல்  பிரதம  மந்திரி பண்டிட்  ஜவஹர்லால்  நேரு  அவர்கள் தங்களுடைய  டிஸ்கவரி  ஆப்  இந்தியா  எனும்  புத்தகத்தில் 'மதுரை  பாண்டிய அரசாங்கத்தின்  தலைநகரமாகவும்,  காயல்  அதனுடைய  துறைமுகமாகவும் இருந்தது என குறிப்பிடுகிறார்.

இவ்வூரில் முதன்முதலாக அமைக்கப்பட்ட தெருக்கள் நான்கு: நயினார் தெருஇ சதுக்கைத் தெரு(பைக்காரத் தெரு), மஹ்தூம் தெரு, மரைக்காயர் தெரு ஆகியவை. பின்னர் ஊர் விரிவாக்கத்தின் போது பல தெருக்கள் உருவாகின. ஊரை அழகாக வடிவமைத்துள்ளனர். பெண்களுக்கென்று தனிப் பாதைகள் (முடுக்குகள்) அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் கூடுமிடத்திற்கு வெட்டை என்பார்கள். எகிப்து நாட்டின் சாலை அமைப்புகள், வீடு அமைப்பைப் போலவே இந்நகரில் வீடுகள், சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன. இன்றும் எகிப்துக்குச் சென்றால் இதே அமைப்பை பார்க்கலாம்.
 
காயல்பட்டணம் தனது பழமை வாய்ந்த கலாச்சாரம் மட்டுமின்றி, இஸ்லாமிய மறைஞானம், அகமிய ஞானம் இவைகளுக்கும் பிரசித்தி பெற்றது. ஆனதால் 'சிறு மக்கா' என்று அழைக்கப்பட்டது. எண்ணிலடங்கா குதுபுமார்களும், அவ்லியாக்களும் இவ்வூரில் பிறந்தும் வாழ்ந்தும் வருகிறார்கள். இவர்களுள் மிகவும்  பெயர்  பெற்று  விளங்கிய  இறைநேச செல்வர்களில்  சிலர்  வருமாறு, பெரிய ஷம்ஸுத்தீன் வலியுல்லாஹ், ஷெய்கு ஸலாஹுத்தீன் வலியுல்லாஹ், ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் மற்றும் இவர்களின் ஐந்து இரத்தினங்களான மக்கள் (சின்ன ஷம்ஸுத்தீன் வலியுல்லாஹ், செய்யித் அஹ்மத் வலியுல்லாஹ், ஸதக்கதுல்லாஹ்  அப்பா  வலியுல்லாஹ், ஷாம் ஷிஹாபுத்தீன்  வலியுல்லாஹ், செய்யித்  ஸலாஹுத்தீன்  வலியுல்லாஹ்), ஹாஃபிழ்   அமீர்  வலியுல்லாஹ், காழி  அலாவுதீன் வலியுல்லாஹ்,  லெப்பை அப்பா சகோதரர்கள் வலியுல்லாஹ், உமர் வலியுல்லாஹ், தைக்கா சாஹிப் வலியுல்லாஹ், பேர் மஹ்மூது மஜ்தூப் வலியுல்லாஹ், வரகவி காசிம் புலவர் நாயகம் வலியுல்லாஹ், முத்துவாப்பா சகோதரர்கள் வலியுல்லாஹ், ஈக்கி அப்பா வலியுல்லாஹ். இவ்வூர் மக்கள் ஷாஃபி, மத்ஹபை பின்பற்றுகின்றனர்.

    ஹஜ்ரத் காழி அலாவுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் திருமணத்திற்குப் பின் பெண்கள் வீட்டிற்கு மாப்பிள்ளை செல்லும் வழக்கம் ஏற்பட்டது.

    சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு ஹஜ்ரத் நாகூர் சாகுல் ஹமீது பாதுஷh நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வூர் வந்திருந்த சமயம் இம்மக்கள் மிகவும் கண்ணியப் படுத்தியதால், உவகை கொண்ட அவர்கள் இவ்வூரில் இறை நேசர்களும், குத்புமார்களும் தோன்றிக்கொண்டே இருப்பார்கள் என்று துஆ செய்தார்கள். மேலும்  நாகூர் நாயகம் வந்த பிறகு காதிரிய்யா தரீகா புத்துணர்ச்சி பெற்று வளர்ந்தோங்கத் தொடங்கியது. இவர்களிடம் பைஅத்துப் பெற்றவர்களில் மிக முக்கியமானவர்கள் ஐந்து ரத்தினங்களை பெற்றெடுத்த ஹஜ்ரத் சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை சதக்கத்தி நெய்னார் அவர்களாவார்கள். இவர்களுக்குப் பின் இவர்களது மகனார் சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஹஜ்ரத் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களது உத்திரவிற்கு இணங்க, காயல்பட்டணம் ஜும்ஆ பெரிய பள்ளியில் வைத்து ஹஜ்ரத் முஹ்யித்தீன் ஆண்டகைரலியல்லாஹு அன்ஹு அவர்களது பேரர் ஹஜ்ரத் ஜலாலுத்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பைஅத்தும்இ கிலாபத்தும் கொடுத்துச் சென்றார்கள்.     ஹஜ்ரத் நாகூர் சாகுல் ஹமீது பாதுஷh நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் துஆவிற்கு ஏற்ப காயல் நகரில் இறைநேசர்களும், குத்புமார்களும் இருந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். ஹஜ்ரத் சுலைமான் வலி அவர்களின் வமிசவழியில் வந்துதித்த ஹஜ்ரத் உமர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், அவர்கள் மகனார் ஹஜ்ரத் தைக்கா சாகிபு வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், ஹஜ்ரத் அப்துல்லாஹில் காதிரியுல் பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், ஹஜ்ரத் ழியாவுல் ஹக் ஸூபி ஹுஸைன் ஹைதராபாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், ஹஜ்ரத் nஷய்கு அப்துல் காதிர் ஸூபி காதிரி காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் காதிரிய்யா தரீகாவை நமதூரில் வளர்த்த மகான்களாவார்கள்.
   
  இதற்கிடையில் ஹஜ்ரத் தைக்கா சாகிபு வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்திற்குப் பின் மிஸ்கீன் சாஹிபு ஆலிம் காஹிரி அவர்களால் நகரில் 'ஷhதுலிய்யா தரீகா' தோன்றியது.
 
 காயல்பட்டணத்தில் நிறைய பள்ளிவாசல்கள் உள்ளன. முக்கியமானவைகளில் சில, பெரிய ஜும்மா பள்ளி, சிறிய ஜும்மா பள்ளி, மீக்காயில் பள்ளி, மொகுதூம் பள்ளி, அஹ்மத் நெய்னார்  பள்ளி,  காதிரிய்யா கொடிமர சிறு நெய்னார் பள்ளி,  முஹிய்யத்தீன் பள்ளிஇபுதுப்பள்ளி, மேலப்பள்ளி, மரைக்கார் பள்ளி, குருவித்துறை பள்ளி ஆகியன. மெஞ்ஞான தவசாலைகளான மஹ்லரத்துல் காதிரிய்யா சபை, அல்ஆரிபுபில்லாஹ் அல்முஹிப்பிர்ரஸூல் அஸ்ஷாஹ் ஷெய்க் அப்துல் காதர் ஆலிம் ஸூஃபி சித்திகி காதிரி காஹிரி  ரழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களால்  தோற்றுவிக்கப்பட்ட  காதிரிய்யா  தரீகாவின் தியான  பீடம் 'ஹிஸ்புல்லாஹ் சபை - ஸூஃபி மன்ஜில்', அஷ்ஷெய்க் அல்ஹாஜ் ஜலீல்  முஹிய்யத்தீன் காதிரி காஹிரி அவர்களால் உருவாக்கப்பட்ட 'அஸ்செய்யித் அப்துஸ்ஷக்கூர் தர்பா அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு குத்பியா மன்ஜில்' ஆகியனவாகும்.
  
தமிழ் இங்குள்ள மக்களின் பேச்சு மொழியாகும். ஒரு காலத்தில் தமிழை அரபு லிபியில் எழுதுவதில் இங்குள்ளவர்கள்  தேர்ச்சி  பெற்று  விளங்கினர். அதை அரபுத்  தமிழ்  என்று  அழைத்தனர்.  முதன்  முதலில்  அரபுத்  தமிழில் எழுதியவர்கள் ஹஜ்ரத் ஹாஃபிழ் அமீர் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களே ஆவார்கள். அல்லாமா ஹபீப் முஹம்மத் லெப்பை ஆலிம், அல்லாமா நூஹ் இப்னு அப்துல் காதர் சாஹிப் ஆகியோர்கள் அல்குர்ஆன் மொழியாக்கம் – விளக்கவுரை, அரபுத் தமிழில் முறையே 'புதூகாதுர் ரஹ்மானியா', 'பத்ஹுல் கரீம்' எனும் பெயரில் எழுதியுள்ளார்கள். காயல்பட்டணத்தின் மாபெரும் மேதைகளான 'புலவர் நாயகம்' எனும் பெயர் பெற்று விளங்கிய ஷெய்குனாப் புலவர் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு , 'திருப்புகழ்' எழுதிய வரகவி காசிம் புலவர் நாயகம் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு, 'வேத புராணம்' பாடிய நூஹூ வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு, 'ஞான ஒப்பாரி' இயற்றிய ஹஜ்ரத் உமர் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு, 'பெரிய ஹதீது மாணிக்க மாலை, சின்ன ஹதீது மாணிக்க மாலை' இயற்றிய ஹஜ்ரத் ஷாம் ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு ஆகிய இவர்கள் தமிழ்  மொழி  இலக்கியத்தில்  பாண்டித்தியம்  பெற்று விளங்கியதோடு, தங்களுடைய கவிகள், கஸீதா இவைகளின் மூலம் தமிழ் மொழி வளரவும், தமிழ் கூறும்  நல்லுலகம்  இஸ்லாமிய  ஷரியத்  சட்டங்களையும் இபிக்ஹூ நுணுக்கங்களையும், தரீகத் வழிமுறைகளையும், ஹகீகத் மற்றும் மக்ரீஃபத் எனும்  அகமியங்களை  தெளிவாக  அறிந்து கொள்ளவும்  மிகவும்  பேருதவி புரிந்தார்கள்.   
  
    ஹஜ்ரத் காழி அலாவுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் திருமணத்திற்குப் பின் பெண்கள் வீட்டிற்கு மாப்பிள்ளை செல்லும் வழக்கம் ஏற்பட்டது.
   
      1955ம் வருடம் ஊரில் ஒரே ஜும்ஆவாக இருந்தது இரண்டு ஜும்ஆவாக பிரிந்து போனது. அதன்பின் அல்-ஜாமிவுல் அஸ்ஹர் எனும் புதிய ஜும்ஆ பள்ளி உருவாகியது. இரண்டு ஜும்ஆ உருவாக காரணமாக அமைந்தது ஊரில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் ஏற்பட்ட போட்டிகளும், சண்டை சச்சரவுகளுமே காரணமாகும்.

இதற்கு முக்கிய காரணகர்த்தாவாக அமைந்தவர்கள் காயல்பட்டணம் ஜாவியா மத்ராஸாவைச் சார்ந்தவர்களே! இவர்கள் காதிரிய்யா தரீகா மற்றும் முஹிய்யத்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது கொண்ட குரோதமும், பகைமையும் காரணமாக வைத்து காதிரிய்யா தரீகாவை பின்பற்றுபவர்களை தந்திரமாக பிரித்து யூதர்கள் செய்யும் நாசகாரச் செயல்களை செய்தார்கள்.

சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் செயல்பட்டு வந்த காயல் மாநகரில் வஹ்ஹாபிஸத்தை வேரூன்ற செய்தவர்கள் இந்த ஜாவியாக்காரர்களே என்றால் அது மிகையல்ல.அச்சமயங்களில் நமது சுன்னத்வல் ஜமாஅத் ஆலிம்கள் தகுந்த பதிலடிகளைக் கொடுத்துகள்ளனர். அவர்கள் வெளியிட்ட ஒடுக்கு பத்வாவிற்கு பதிலாக வெளியிடப்பட்ட பத்வாவினை பார்க்க:http://sufimanzil.org/fatwa/fikhfatwas/odukku-fatwa
  
    காயல்பட்டணத்தில் மூன்றாவது அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 1978 ஜனவரி மாதம் 1314,15 ஆகிய தினங்களில் ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தில் வைத்து நடைபெற்றது. இதில் 11 நூல்கள் வெளியிடப்பட்டன. கருத்தரங்கம், கவியரங்கம் பாராட்டு விழாக்கள் நடைபெற்றன.

Thursday, March 17, 2011

முகப்புச் செய்தி

உலக அளவில் உள்ள தப்லீக் ஜமாஅத் என்ற அமைப்பு மௌலவி இல்யாஸ் காந்தலவி என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. இந்த இயக்கத்தில் சேர்ந்தவர்கள் அனைவர்களும் இந்த இயக்கத்தின் கொள்கைக் கோட்பாடுகளையும், இவர்களின் குருமார்களின் கொள்கைகளையும் அடிப்படையாகக் கொண்டே செயல்படுகின்றனர். இதில் நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் என்ற வேறுபாடு கிடையாது.

அதே போலத்தான் இந்தியா, தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் காயல்பட்டணத்தில் இருக்கும் தப்லீக் ஜமாஅத்தைப் பின்பற்றுபவர்களும்  இருக்கிறார்கள். ஆனால் சிலர் காயல்பட்டணம் தப்லீக் ஜமாஅத் வேறுபட்டது என்று கூறித் திரிகிறார்கள். அவர்களின் இந்தக் கூற்று உண்மையானதா?என்பதை ஆதாரப்பூர்வமாக இந்த இணையதளத்தில் காணலாம்.